பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்னனின் போராட்டங்கள் | 9 என மாற்றியிருந்தது என் மனசில் பதிந்திருந்தது. அதே போல, ராஜவல்லிபுரத்தில் உள்ள வல்வியையும் கிருஷ்ணஸ்வாமி என்பதை கண்ணன் என மாற்றி அதையும்இணைத்து, வல்லிக்கண்ணன் என்று எனக்கு நானே பெயர் சூட்டிக் கொண்டேன். - 1942க்கு முன்னரே இந்தப் பெயர் பிரபலமாகி விட்டது. நான் அப்போது எழுதி வந்த உருவகக் கதைகள் 'கலைமகள்' பத்திரிகையில் எடுப்பாக வெளிவந்தன. அவை இலக்கியவாதிகளின் பாராட்டுக்களைப் பெற்றி ருந்தன. காரைக்குடியிலிருந்து இந்திரா என்றொரு பத்திரிகை வந்து கொண்டிருந்தது. அது 1941ல் சிறு கதைப் போட்டி ஒன்றை நடத்தியது, அதில் தெருக் கூத்து என்ற எனது கதை முதல் பரிசு பெற்றது. பி.வி. அகிலாண்டம் (அகிலன்) கதை இரண்டாவது பரிசு பெற்றது. ப.நீலகண்டன் இந்திராவின் ஆசிரியராக இருந் தார். இவர் பின்னர் நாடக ஆசிரியர் ஆகி, சினிமாத் துறையில் புகுந்து, வளர்ந்து, சினிமா டைரக்டர் ஆகவும், சொந்தப் படம் தயாரிப்பவராகவும் பரிணாமம் பெற்றது தனி வரலாறு. லோகசக்தி யுடன் தொடர்பு கொண்டிருந்த சக்திதாசன் சுப்பிரமணியன், திரு.வி. கலியாணசுந்தர முதலியாரின் நவசக்தி பத்திரிகையில் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்தார். கே. ராமநாதனும் அதன் உதவி ஆசிரியராக இருந்தார், பிறகு அவர் இலங்கை சென்றார்.