பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் 13 அக் கால கட்டத்திலேயே கிடைத்த புத்தகங் களை எல்லாம் படித்துத் தீர்த்தேன். அகப்பட்ட பத்திரிகைகள் பலவற்றையும், அவை பழசோ புதுசோ படித்து ரசித்தேன். ஸ்கூல் லைபிரரியில் அதிகமான புத்தகங்கள் எடுத்து, அவற்றை விடாது படித்துப் பயனடைந்த அந்நாளைய மாணவன் நான் ஒருவனாகத்தான் இருந்திருக்கக் கூடும்! 'ஆனந்த விகடன்' பத்திரிகையை அதன் ஆரம்ப இதழிலிருந்து ஒருவர் பைண்டு செய்து வைத்திருந் தார். பாளையங்கோட்டையில் அவர் எங்கள் பக்கத்து வீட்டுக்காரராகவும் இருந்தார். அவரிட மிருந்து விகடன் தொகுதிகளை இரவல் பெற்றுப் படிக்கக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந் நாட்களில் வாசகர்களிடையே செல்வாக்கு பெற்றிருந்த வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆரணி கு ப் பு: ச ா மி முதலியார், ஜே. ஆர். ரங்கராஜு, வை. மு. கோதைநாயகி அம்மாள் ஆகியோரின் நாவல்களை என் அண்ணாக்களும், அவர்களது நண் பர்களும், வட்டமாக உட்கார்ந்து, ஒருவர் இத்தனை பக்கங்கள் உரக்கப் படிப்பது என்று கணக்கிட்டு, முறை வைத்து வாசிப்பார்கள். அப்படி வாசிப்பதன் மூலம் ஒரு நாவலை விரைவாகப் பலர் படித்து முடித்து விடலாம்; எனவே தொடர்ந்த பல நாவல் களை சீக்கிரம் படிக்க வசதிப்படும் என்ற - பாளையங்கோட்டை நகரசபை துலக யவே நாவல்கள் இருந்தன. அவற்றை படிக்கையில் நானும் கூடவே இருந்து மகிழ்ந்தேன்.