பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் திருநெல்வேலி டவுன் முனிசிபல் லைபிரரியில் நல்ல ஆங்கிலப் புத்தகங்கள் இருந்தன. பெர்னாட் வடிா புத்தகங்களை என் அண்ணா எடுத்து வருவார். அவற்றைப் படிக்கும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது. தி. க. சிவசங்கரன் 1941 ஜூன் மாதம் அறிமுக மானார். புதிய புதிய தமிழ் புத்தகங்களையும், படிக்க வேண்டும் என்று தோன்றுகிற பழைய நூல் களை யும் அவர் கொண்டு தந்தார். இப்படியாக படிப்பதற்குப் புத்தகங்கள் கினடத்துக் கொண்டுதான் இருந்தன. என்றாலும் என் மனம் அமைதியுறவில்லை? சென்னைக்குப் போனால் இன்னும் நிறையப் புத்தகங்களை-உலக இலக்கியங்கள்-படிக்க வசதி கிடைக்கும் என்ற எண்ணம் உந்திக் கொண்டே இருந்தது. வீட்டுக்குச் சுமையாக இருக்கிறேனே என்ற உறுத்தலும் அத்துடன் சேர்ந்தது. ஆகவே, ஒருநாள் அதிகாலையில் நான் வீட்டை விட்டு வெளியேறினேன். யாரிடமும் சொல் விக் கொள்ளாமல். கையில் காசு எதுவும் இல்லாமல், வீட்டிலிருந்து மற்றவர்கள் அனு மதி இல்லாது, யாருக்கும் தெரியாமல் பணம் எடுத்துக் கொண்டால், அது திருடியது போல் ஆகும் என்று மனசாட்சி அறிவுறுத்தியது. ஒரு தைரியம், ஒரு கற்பனை வேகம், ஒரு லட்சிய வெறி: என் உள்ளத்துக்குத் தனி உறுதி தந்தன. கால்களுக்குத் தனி பலம் சேர்த்தன. படித்திருந்த சில தகவல்கள் கனவுகளை வளர்த்திருந்தன. ஆங்கில எழுத்தாளன் ஆலிவர் கோல்டு ஸ்மித், பையில் காசு இல்லாமலே, நடந்து நடந்து ஐரோப்பா முழுவதும் பயணம் செய்திருந்தான்... இத்தாலி நாட்