பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண் ணனின் போராட்டங்கள் 21 வாகனன்) ஆசிரியர். ந.பிச்சமூர்த்தி, கு.ப. ராஜ கோபாலன், பெ. கோ. சுந்தரராஜன் (சிட்டி), க.நா. சுப்ரமண்யம் முதலியவர்கள் அதில் எழுதிக் கொண்டிருந்தார்கள். என்னுடைய கதைகளும் வந்தன. அதனால் கலாமோகினி ஆசிரியரை அறிமுகம் செய்து கொள்ளவும், நட்பு முறையில் உரையாடவும் அவரைத் தேடிப் போனேன். பேச்சோடு பேச்சாக எனது நோக்கத்தை தெரிவித்தேன். எனது வளர்ச்சிக்கு, உதவக்கூடிய ஒரு பத்திரிகையை தேடிக் கொண்டிருக்கிறேன். சேலம் போய் சண்டமாருதத்தை பார்க்கலாம் என்று கிளம்பி னேன். நாளை காலை பஸ்ஸில்...” போக வேண்டாம்!” என்று தடுத்தார் நண்பர். 'திருநெல்வேலிக்கே திரும்பிப் போங்கள். நீங்கள் பத்திரிகைக்காரர்களை தேடிப் போவதன் மூலம் உங்கள் மதிப்புதான் குறையும். நீங்கள் எதிர் பார்க்கிற பலன் எதுவும் கிடைக்காது’ என்றார். தொடர்ந்து சொன்னார்: வீட்டிலிருந்து வழக்கம் போல் எழுத்து வேலைகளை கவனியுங்கள். வேளை வரும். அப்படி சந்தர்ப்பம் ஏற்படுகிற போது நான் உங்களுக்குக் கடிதம் எழுதுவேன்.' எனவே, நான் திரும்பவும் தென்திசை சென்றேன். 'திருமகள் அனுபவம் புதுக்கோட்டையிலிருந்து 'திருமகள் என்ற மாதப் பத்திரிகை வந்து கொண்டிருந்தது. ராசி. சிதம்பரம் பப்ளிஷர். இராம. மருதப்பன் ஆசிரியர். சுமாராக இருக்கும். வ-2