பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் லெ. கதிரேசன் செட்டியார் குடிசைத் தொழில் மாதிரி தடத்திய அணிகலம்’ என்ற மாசிகையும் வத்தது. இவை தரமான விஷயங்களைத் தர முயன்றன. ஆற்றல் பெற்ற இளைய எழுத்தாளர்களின் எழுத்துக் கள் இவற்றில் மிகுதியாக இடம் பெற்றன. எனது எழுத்துக்கள் நிறையவே பிரசுரமாயின. . . திடீரென்று திருமகளிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. ராசி. சிதம்பரம் எழுதியிருந்தார். திருமகளை "மணிக்கொடி மாதிரி இலக்கியத்தரமான பத்திரிகை யாக வளர்க்கத் திட்டமிட்டிருப்பதாகவும், சாலி வாகனனிடம் யோசனை கேட்டபோது அவர் என்னைப் பற்றி சொன்னதாகவும் எழுதி, நான் உடனே திருமகளில் சேர்ந்து பணி புரிவதற்கு வர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். வி.ரா.ரா. கடிதமும் வந்தது. திருமகள் மறு மலர்ச்சி இலக்கியப் பத்திரிகையாக வளர வசதிகள் செய்வதில் அதன் பிரசுர கர்த்தர் ஆர்வமாக இருக் கிறார்: நீங்கள் இந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்ளலாம் என்று யோசனை கூறியிருந்தார். அதன்படி 1943 ஜனவரி மாதம் நான் புதுக் கோட்டை போய், திருமகளில் சேர்ந்தேன். - திருமகள் ஆபீஸ் பெரிய மாடியில் வசதியாகத் தான் இருந்தது. அதன் பப்ளிஷரும் உற்சாகமுள்ள இளைஞர்தான். ஆ ன ல் அவர் செயல்களில் அவருடைய வீட்டினருக்கு நம்பிக்கையில்லை. அவரை ஊக்குவிக்கும் எண்ணமும் இருந்ததில்லை. நான் அங்கே சேர்ந்த சில தினங்களிலேயே இவ் விஷயம் எனக்கு வெட்ட வெளிச்சமாகி விட்டது.