பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் 29 பிளாக்கு கூடத் தயார் பண்ணியாச்சு. அப்புறம் சரிப் பட்டு வரவில்லை. அவரும் வேறு வழியில் போய் விட்டார். அந்த நிலா இலக்கிய இதழை இப்போது ஆரம்பிக்கலாம். சில மாதங்கள் பொறுத்திருங்கள். கூடவே புத்தகங்களும் வெளியிடுவோம். உங்கள் கதைகளை தொகுத்துப் பிரசுரிப்போம். பொற் காலப் பிரசுரம் என்று பெயர் வைப்போம். இம் மாதிரி நிறையவே சொன்னார். இவற்றில் எதுவும் நடக்காது என்பது எனக்குத் தெரியும். எனினும் அவர் அன்புக்காக மேலும் சில மாதங்கள் அங்கே தங்கியிருக்க இசைந்தேன். 'கலா மோகினி', 'கிராம ஊழியன், மற்றும் இலக்கியப் பத்திரிகைகளுக்குக் கதைகள் எழுதி வந்தேன், காலம் ஓடியது. மேலும் மூன்று மாதங்கள் கழிந்தன. பி. எஸ். செட்டியாரிடமும் அவர் குடும்பத்தாரி டமும் உள்ளதைச் சொல்லி நேரான முறையில் வெளியேற முடியாது என்ற நிலை இருந்ததால், நான் என் அம்மாவையும் சகோதரர்களையும் பார்ப்பதற் காக ராஜவல்லிபுரம் போக வேண்டியிருக்கிறது என்று சொல்லி, அவர்கள் சம்மதத்தைப் பெற்றுக் கொண்டேன். o - வரவேண்டிய இதழுக்குத் தேவையான விஷயங் களைத் தயாரித்து வைத்தேன். டைப் அடிக்க வேண்டியவற்றை இரவில் நெடு நேரம் வரை டைப் செய்து முடித்துவிட்டுப் படுத்தேன். திருநெல்வேலிக்குப் போவதற்கு இரவு 1 மணிக்கு ரயில் இருந்தது. அதற்குச் சற்று முந்தி சென்னைப்