பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 வல்விக்கண்ணனின் போராட்டங்கள் பக்கம் போவதற்கு ஒரு பாசஞ்சர் வண்டி இருந்தது. இரவு பதினோரு மணி சுமாருக்கு எழுந்து, யாரிட மும் சொல்லிக் கொள்ளாமல், என் பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினேன். 零沙 絮 இருட்டில் ரயில் நிலையம் நோக்கி நடந்தேன். அந்த பாசஞ்சர் ஜோலார்பேட்டை வரை தான் போகும். அந்த ஸ்டேஷனுக்கு டிக்கட் வாங்கிக் கொண்டு ரயிலில் ஏறி உட்கார்ந்தேன். ரயில் புறப்படும் வரை மனம் திக்திக்கென்று அடித்துக் கொண்டது. வீட்டிலிருந்து செட்டியாரின் மருமகன் கிருஷ்ணன்-ஆசிரியர் ஊரில் இல்லாத சமயங்களில் பத்திரிகை நிர்வாகத்தை கவனித்துக் கொண்டிருந்தவர்-வந்துவிடக் கூடாதே அவர் வந்து விட்டால் என் திட்டம் நடை பெறாதே என்று தான். இதிலும் எனக்குக் காலம் துணை புரிந்தது. அப்படி என்னைத் தேடி அவர் வருவதற்கு முன்ன தாகவே ரயில் கிளம்பி விட்டது. - அப்புறம் கிருஷ்ணன் ஸ்டேஷனுக்கு வந்து, திண்டுக்கல் பக்கம் போவதற்காக நின்ற ரயிலில் தேடியதாகவும், என் பெயரைக் கூவி, பெட்டி பெட்டி யாகத் தேடி அலுத்ததாகவும் பின்னர் எனக்குத் தெரிய வந்தது. அது நிகழ்ந்தது 1943 டிசம்பர் ஆரம்பத்தில். சென்னைக்கு வந்தேன் ஒரு மாதிரியாக நான் சென்னை வந்து சேர்ந்து விட்டேன்.