பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் 31 அப்படி வருவதற்கு முன்னர் சக்திதாசன் சுப்பிர மணியனுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். அவரும் வந்து சேரும்படி பதில் எழுதினார். நவசக்தி ஆபீஸ் மயிலாப்பூர் நடுத் தெருவில் இருந்தது. நான் அங்கே வந்தபோது சக்திதாசன் இலங்கை சென்றிருந்தார். தயாராகிக் கொண்டிருந்த கிராம ஊழியன் பொங்கல் மலருக்காக விளம்பரங்களும், கதை கட்டுரைகளும் சேகரம் செய்வதற்காக சென்னை வந்திருந்த திருலோக சீதாராம் நவசக்தி அலுவல கத்தில் தங்கியிருந்தார். என்னை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். சென்னைக்குப் புதியவனான எனக்கு சென்னை நகரத்தின் பல பகுதிகளையும், பல எழுத்தாளர்களை யும், பத்திரிகைக்காரர்களையும் திருலோக சீதாராம் அறிமுகப்படுத்தினார். அந் நாட்களில் சென்னையின் வீதிகளில் டிராம் வண்டிகள் ஓடின. நாங்கள் இருவரும் டிராமிலும் ரிக்ஷாவிலும் நடந்தும் நெடு கி லும் சுற்றித் திரிந்தோம். விளம்பரத்துக்காகப் பலப்பல நிறுவனங் களிலும் ஏறி இறங்கினோம். . புதுமைப்பித்தனை எனக்கு அறிமுகப்படுத்தியது அவர்தான். : . . . : திருலோக சீதாராம் சதா பாரதி பாடல்களைப் பாடிக்கொண்டே வருவார். ஓயாது வெற்றிலை பாக்குப் போடுவார். எழுத்தாளர்கள், பத்திரிகைகள், தனது அனுபவங்கள் பற்றி நிறையவே சொன்னார். இந்த வகையில் அவர் எனக்கு நண்பனாய், வழி காட்டியாய் திகழ்ந்தார்.