பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் 'நவசக்தி' பற்றியும் சொன்னார். அது ஒழுங்காக வராது. பொருளாதார பலம் இல்லை. பணம் சேகரித்து வருவதற்குத்தான் சக்திதாசன் இலங்கை போயிருக்கிறார். நீங்கள் நவசக்தியில் வேலை பார்ப் பதைவிட கிராம ஊழியனுக்கு வந்து விடுவதே நல்லது. கிராம ஊழியனுக்கு உங்களைப் போல் ஒரு உதவி ஆசிரியர் தேவை என்று வலியுறுத்தினார். ‘என்னை சென்னைக்கு வரும்படி அழைத்தவர் சக்திதாசன் தான். அவர் இலங்கையிலிருந்து வந்த பிறகு அவரிடம் சொல்லிவிட்டு வருவேன். இப்பவே உங்களோடு துறையூருக்கு வருவதற்கில்லை’ என்று சொன்னேன். இரண்டு வாரங்களுக்குப் பிறகு திருலோகம் திருச்சி சென்றார். டோவதற்கு முன்னும், யோசித்துச் செய்யுங்கள்' என்று கூறி விடை பெற்றார். நவசக்தி'யின் ஆதார சக்தியாக இருந்த ராதா மணி அம்மாளும், திரு.வி.க. நவசக்தி'யில் பணி புரிந்து விட்டு இலங்கை சென்று தீவிரவாதியாகவும் முற்போக்கு இலக்கியவாதியாகவும் திரும்பியிருந்த கே.ராமநாதனும் பத்திரிகையைக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டிய போதிலும், அந்த மாசிகை திணறிய வாறிருந்தது. டிசம்பர் மாத இதழ் வெளி வருவதற்கு மிகுந்த காலதாமதம் ஆயிற்று. என் இஷ்டம் போல் சென்னையை சுற்றிப் பார்ப் பதற்கு எனக்கு நேரம் நிறையவே இருந்தது. நடந்து நடந்தே பல பகுதிகளையும் பார்த்து முடித்தேன். பிரசண்ட விகடன் ஆபீசுக்குப் போய் நாரண துரைக்கண்ணனை சந்தித்தேன்.