பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் 39 மாதம் தோறும் இதழ் வெளியிட இயலாத நிலையே நீடித்தது. 1944 ஜனவரி மாதம் இதழ் வந்தது. பிப்ரவரி யில் வரவில்லை. இதற்குள் துறையூரிலிருந்து திருலோக சீதாராம் பல கடிதங்கள் எழுதி விட்டார். நான் தயங்கிக் கொண்டிருந்ததை உணர்ந்து, பிப்ரவரி இறுதியில் கிராம ஊழியன் பப்ளிஷரான அ. வெ. ர. கிருஷ்ண சாமி ரெட்டியார் நேரில் வந்து என்னையும் உடன் அழைத்துக் கொண்டு திரும்பினார். நான் போகிறேன் என்று தெரிவித்ததும் சக்தி தாசன் வெகுவாக வருத்தப்பட்டார். பத்திரிகையை நன்றாக வளர்ப்பதற்குத் திட்டங்கள் வைத்திருப்ப தாகவும், நான் அவரோடு இருந்தால் உதவியாக இருக்கும் என்றும் சொன்னார். மற்றர்வகளும் வருத் தத்துடனேயேதான் எனக்கு விடை கொடுத்தனர். நான் அங்கேயே இருந்திருந்தாலும் நவசக்தி, திடமாக வளர்ந்திருக்க முடியாதுதான். அது நீடித்து வாழ்ந்திருக்கவுமில்லை. 1944 பிப்ரவரி இறுதியில் நான் சென்னையை நீங்கினேன். கிராம ஊழியன் மறுமலர்ச்சி இலக்கிய இதழில் பணிபுரிவதற்காக நான் துறையூர் வந்து சேர்ந்தேன். - . கிராம ஊழியன் துறையூர் திருச்சி நகரிலிருந்து 28 மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு சிற்றுார். அங்கே கிராம ஊழியன் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கும் அரசியல் பத்திரிகையாக நடந்து கொண்டிருந்தது. இடைக்