பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் ! 11 அச்சமயம் கு ப. ரா. கும்பகோணத்தில் வசித் தார். திருச்சி நண்பர்களின் யோசனையின்படி அவரை கிராம ஊழியன் கெளரவ ஆசிரியராக அவர் கள் ஏற்றுக் கொண்டார்கள். கு. ப. ராஜகோபாலன் கெளரவ ஆசிரியராகவும், திருலோக சீதாராம் ஆசிரியராகவும் பொறுப்பு ஏற்று, கிராம ஊழியன்’ மறுமலர்ச்சி இலக்கிய மாதம் இருமுறைப் பத்திரிகையாக 15-8-1948 முதல் வெளிவரத் தொடங்கியது. கு. ப. ரா. கும்பகோணத்திலிருந்தே ஒவ்வொரு இதழுக்கும் விஷயங்கள் அனுப்பினார். கு. ப. ரா., கரிச்சான், பரத்வாஜன் என்று பல பெயர்களில் கதை, கட்டுரை, மாவீரன் சிவாஜி மன்னன் வரலாறு, ஒரங்க நாடகம் எல்லாம் எழுதினார். எம். வி. வெங்கட்ராம், தி. ஜானகிராமன், ஆர், நாராயணசுவாமி, ஸ்வாமி நாத ஆத்ரேயன், கி. ரா. கோபாலன், மற்றும் இளைய எழுத்தாளர்கள் சிலரது எழுத்துக்களையும் வாங்கி அனுப்பினார். கோபுலு, சாரதி முதலிய இளம் ஒவியர்களின் சித்திரங்களையும் அனுப்பிக் கொண்டிருந்தார். அவருக்கு இருந்த உற்சாகத்தில், தனக்குப் பணம் எதுவும் வேண்டாம் என்று கு. ப. ரா. திருலோக சீதாராமிடம் கூறியிருந்தார். எனினும் ஊழியன் நிறுவனம் அவருக்கு மாதம் ஐம்பது ரூபாய் அனுப்பி வந்தது. 9-வது இதழ் முதல் கு. ப. ராஜகோபாலன் ஆசிரியர் என்றும், திருலோக சீதாராம் நிர்வாக ஆசிரியர் என்றும் பத்திரிகையில் அச்சிடப்பட்டது. கு. ப. ரா. வழக்கம் போல் விஷயங்கள் அனுப்பி