பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் வந்தார். அவருக்கு மாதம் தோறும் நூறு ரூபாய் அனுப்ப நிர்வாகம் முன் வந்தது. ஊழியனில் எழுதுகிற இளைய எழுத்தாளர்களுக்கு சன்மானம் வாங்கித் தருவதாக கு. ப. ரா. பேச்சோடு பேச்சாகச் சொல்லியிருந்ததாகத் .ெ த ரி கி றது. ஆனால், கிராம ஊழியன் யாருக்கும் அன்பளிப்பு' வழங்கவில்லை. . கு, ப. ரா. ஆசிரியராக இருந்த காலத்தில் (1944 ஜனவரியில்) கி. ஊழியன் ஒரு 'பொங்கல் மலர் வெளி யிட்டது. பெரிய அளவில். அதற்கு விஷயங்களும் விளம்பரங்களும் சேகரிப் பதற்காக சென்னைக்கு வந்த திருலோகத்துடன் கு. ப. ரா. வும் வந்தார். ஆயினும் சில நாட்களில் அவர் கும்பகோணம் திரும்பி விட்டார். நான் சென்னை வந்த போது அவர் அங்கே இல்லை. நான் துறையூர் சேர்ந்த பிறகு, ஏப்ரல் ஆரம்பத் தில் கு. ப. ரா. துறையூருக்கு ஒரு தடவை வந்தார். கு. ப. ரா. வை நான் பார்த்த முதல் தடவை அது தான். அதுவே கடைசித் தடவையாகவும் முடிந்து விட்டது. х துறையூருக்கு அம்முறை அவர் வந்து போனது கு. ப.ரா. வின் வாழ்க்கையில் ஒரு சோக நிகழ்ச்சியாக அமைந்தது. அவருடைய மென்மையான உள்ளத்தை அது வெகுவாக பாதித்து விட்டது. கு. ப. ரா. கும்பகோணத்தில் சிரமமான வாழ்க்கையே வாழ்ந்து வந்தார். அந்தச் சந்தர்ப்பத் தில் மொத்தமாகச் சிறிது அளவு நெல் வாங்கி வைத்துக் கொண்டால் ரொம்பு செளகரியமாக இருக்