பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் | 43 கும் என்று அவருக்குத் தோன்றியது. அதற்கு நூறு ரூபாய் வேண்டும். கி. ஊழியனுக்குக் கடிதம் எழுது வதை விட நேரில் போய் பார்த்துப் பேசுவதே நல்லது: பணம் நிச்சயம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. புறப்பட்டு வந்தார். நூறு ரூபாய் கேட்ட போது, அவருக்கு அது தர மறுக்கப்பட்டது. இது லிமிட்டெட் ஸ்தாபனம்; நினைத்த போது நினைத்த அளவு பணம் கிடைக் காது என்ற தன்மையில் திருலோக சீதாராம் பேசி 687 т гh. இருவருக்குமிடையே பேச்சு வளர்ந்து, கசப்பான வாக்குவாதமாக முற்றியது. 'நீங்கள் என்னை எக்ஸ்ப்ளாயிட் பண்ணுகிறீர்கள்' என்று கு ப. ரா. வருத்தத்துடன் சொன்னார். "மிஸ்டர் கு. ப. ரா! நீங்கள் உங்களை மறந்து பேசுகிறீர்கள். சென்னை பப்ளிஷர்கள் உங்களை எக்ஸ்ப்ளாயிட் பண்ணினார்கள். சென்னை பத்திரி கைக்காரர்கள் உங்களை எக்ஸ்ப்ளாயிட் பண்ணினார் கள். அவர்களை எதிர்க்க உங்களுக்கு தைரியமில்லை. கும்பகோணத்துக்கு வந்து சும்மா இருந்தீர்கள். கிராம ஊழியன் உங்களுக்கு தனி அந்தஸ்து அளித்தது. உங்களை கெளரவ ஆசிரியர் ஆக்கினோம். பிறகு ஆசிரியர் என்றே போட்டோம். எனக்குப் பணமே வேண்டாம், நான் எழுதுகிறவை எல்லாம் பத்திரிகை யில் வந்தால் சரிதான் என்று நீங்கள் சொன்னிர்கள். அது சரியல்ல என்று நாங்களாகவே முப்பது ரூபாய் தர எண்ணி, அதை ஐம்பதாக்கி மாதம் தோறும் அனுப்பினோம். ஆசிரியர் என்று போட்ட பிறகு நூறு ருபாய் அனுப்ப முன் வந்தோம். அதை