பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்னனின் போராட்டங்கள் | 51 மேலும் அதிகமான மதிப்பை அங்கே பெற்றது. இதை இலங்கையிலிருந்து வந்த இலக்கிய ரசிகர்கள் குறிப் பிடத் தவறவில்லை. அந்தக் காலகட்டத்தில் கொழும்புவில் வசித்த இலக்கியப் புரவலர் ஒட்டப்பிடாரம் ஆ. குருசுவாமி பிற்காலத்தில் அடிக்கடி இதை சொல்லிச் சொல்லி மகிழ்வது வழக்கம். கு. ப. ரா. அறிமுகம் செய்த ஒவியர்கள் ஊழியன் மலருக்கு உற்சாகத்துடன் தொண்டாற்றினார்கள். கதை கட்டுரை,கவிதைகளின் தலைப்பு எழுத்துக்களை அழகாக எழுதி, சிறுசிறு சித்திரங்களும் தீட்டித் தந்தார்கள், கோபுலு வரைந்த நிழல் சித்திரம் (சில்ஹவுட்) ஒன்று அட்டை ஓவியமாக அணி செய்தது. கே. ஏ. அப்பாஸ் கதை ஒன்று (ட்வெல்வ் ஹவர்ஸ்) ஒரு இரவு' என்ற தமிழாக்கமாக மலரில் இடம் பெற்றிருந்தது. அது ரசிகர்களின் பாராட்டுக் களையும் கண்டனங்களையும் அதிகம் பெற்றது. எழுத்தாளர் மகாநாடு முதலாவது தமிழ் எழுத்தாளர் மகாநாடு 1944 பிற்பகுதியில் கோயம்புத்துனரில் கூடியது. ஆர். திருஞானசம்பந்தம், ஆர். சண்முகசுந்தரம் மற்றும் கோவை எழுத்தாளர்கள் பலரின் தீவிர முயற்சியால் அம் மகாநாடு நடைபெற்றது. வ. ரா. தலைவர். டி. எஸ். சொக்கலிங்கம் மகா நாட்டை ஆரம்பித்து வைத்து உரை நிகழ்த்தினார். பலர் உற்சாகமாகப் பேசினார்கள். பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை, திருச்சி, மதுரை,