பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 | வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் மற்றும் பல ஊர்களிலிருந்தும் எழுத்தாளர்கள் வந்து கலந்து கொண்டார்கள். இந்த மகாநாட்டில் கலந்து கொண்டவர்கள் ஒவ்வொருவராக எழுந்து தங்களை தாங்களே அறிமுகம் செய்துகொண்ட நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருந்தது. அநேகர் புதுமையாகவும் சுவையாகவும் சுய அறிமுகம் செய்தனர். எனது சுய விளம்பரத்துக்கு அந்த அரங்கம் நல்ல இடமாகத் தோன்றியதால் நான் அடுக்கினேன் கான் தான் வல்லிக்கண்ணன் கான் தான் கையாண்டி பாரதி கான் தான் சொனா. முனா. நான் தான் சொக்கலிங்கம் கான் தான் கெண்டையன் பிள்ளை நான் தான் கோரநாதன் நான் தான் மிவாஸ்கி நான் தான் வேதாந்தி நான் தான் பிள்ளையார் கான் தான் தத்துவதரிசி நான் தான் அவதாரம் நான் தான் இளவல் நான் தான் ரா. சு. கிருஷ்ணஸ்வாமி இப்படி வேகமாக அடுக்கிக் கொண்டே போனது எல்லோருக்கும் வியப்பு தந்தது; தமாஷாகவும் இருந்தது. - - இத்தனை பெயர்களிலும் நான் எழுதிக் கொண் டிருந்தேன். கிராம ஊழியன் வாசகர்களில் பலர் நையாண்டி பாரதி, சொக்கலிங்கம், மிவாஸ்கி சொனாமுனா, கோரநாதன் ஆகியோர் தனித்தனி