பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்னனின் போராட்டங்கள் | க்3 நபர்களே என்று எண்ணிக்கொண்டிருந்தார்கள். அவ்விதம் தனித்தனி நடைகளில் தனிப்பட்ட விஷயங் கள் பற்றிய கட்டுரைகள், கதைகள், சிந்தனைகள் இப் பெயர்களில் வெளியிடப்பட்டன. இதற்குப் பிறகு வெவ்வேறு சமயங்களில் பலவித மான உபதேசங்களும் போதனைகளும் பல பேரிட மிருந்து எனக்குக் கிடைக்கலாயின. -எதுக்காக இவ்வளவு அதிகம் எழுதுகிறீர்கள்? ஏன் பலரையும் தாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்? நையாண்டி பண்ணுவது நல்லதல்ல. இப்படி நிறைய எழுதிக்கொண்டிருந்தால் உங்களால் ரொம்ப காலம் எழுதமுடியாது. எழுத்தில் ரெஸ்ட்ரெய்ன்ட் (தன்ன டக்கம், கட்டுப்பாடு) வேண்டும். இவ்விதம் சட்டாம்பிள்ளைத்தனம் பண்ணுகிற வர்கள் அவ்வப்போது எதிர்பட்டவாறு இருந்தார்கள். நான் என் போக்கில் எழுதிக்கொண்டே இருந்தேன். ரசிக்கிறவர்கள், பாராட்டுகிறவர்கள், கண்டிக்கிற வர்கள், குறைகூறுகிறவர்கள், கோபப்படுகிறவர்கள், உற்சாகமூட்டுகிறவர்கள், பரிகசிக்கிறவர்கள்-வாசகர் களிடையே இப்படிப் பலதரப்பட்டவர்களும் இருந் தார்கள். இப்பவும் இருக்கிறார்கள். உலகம் பலவிதம்! மனிதர்கள் ரகம் ரகம்! சினிமா சான்ஸ்! எனக்கு நல்லது செய்ய விரும்பினார். நாடக நடிகர், முத்தமிழ் கலா வித்வ ரத்ன அவ்வை டி. கே. சண்முகம். به سس (ته