பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் அவருக்கும் எனக்கும் நட்பு ஏற்பட்டது. ஒரு சுவையான கதை. - நான் திருநெல்வேலியில் சும்மா இருந்தபோது1942ல்- எனது எழுத்து வளர்ச்சிக்கு உதவக்கூடிய பத்திரிகை ஆசிரியர்களுக்குக் கடிதங்கள் எழுதிய சமயம், டி. கே. சண்முகத்துக்கும் எழுதினேன். மேலை நாட்டு எழுத்தாளர்களில் சிலர் நாடகக் கம்பெனிகளில் சேர்ந்து வாழ்ந்து, நாடகக் கலை அனுபவம் பெற்று, நல்ல பல நாடகங்கள் படைத் திருக்கிறார்கள். நானும் ஏன் அப்படி ஒரு நாடகக் குழுவில் சிறிது காலம் தங்கி, அனுபவம் பெற்று, கலைத் தரமான நாட்கங்களை படைக்கக்கூடாது? இப்படி ஒரு மூளை அதிர்வு (பிரெய்ன் வேவ்) எனக்கு ஏற்பட்டது. - டி.கே.எஸ்.இசகோதரர்களின் நாடக சபை நல்ல முறையில் கலைப்பணி புரிந்து கொண்டிருந்தது. டி.கே. சண்முகம் கலைஞர்; நல்ல இலக்கிய ரசிகர். எழுத முயன்று கொண்டிருந்தவரும் கூட. அவருடைய கட்டுரைகள் சில பத்திரிகைகளில் பிரசுரமாகி யிருந்தன. எனவே, எனது எண்ணத்தைத் தெரிவித்து நான் அவருக்குக் கடிதம் எழுதினேன். யோசிப்பதற்குப் போதிய கால அவகாசம் எடுத்துக் கொண்டு, அவருடைய பெரிய அண்ணாச்சி' டி.கே. சங்கரன் கருத்தையும் தெரிந்து கொண்டு, சண்முகம் எனக்கு பதில் எழுதினார். - -உங்கள் எழுத்துக்களை நான் பல பத்திரிகை களிலும் படித்து ரசித்திருக்கிறேன். உங்களைப்