பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் : 35 போன்ற ஒரு எழுத்தாளரை எங்கள் நாடகக் கம்பெனியில் சேர்த்துக் கொண்டு, உங்கள் திறமையை எப்படிப் பயன்படுத்துவது என்று எனக்குப் புரிய வில்லை. நீங்கள் விரும்புகிற வாய்ப்பை உங்களுக்கு அளிக்கக் கூடிய நிலையில் நாங்கள் இல்லை. வருத்தம். இந்த ரீதியில் அவருடைய கடிதம் இருந்தது. சரி போ; வீசுகிற கல்லை வீசுயாச்சி! மாங்காய் விழவில்லை என்று என் மனக்குறளி கூறிக் கொண்டது. பிறகு நான் சினிமா உலகம்' பத்திரிகையில் சேர்ந்திருந்த புதுசில், நாடகக் கம்பெனி விளம்பரம் விஷயமாக, பி.எஸ். செட்டியாரின் உறவினர் எஸ்.பி.கிருஷ்ணனும் நானும் டி.கே.எஸ். சகோதரர் களை சந்திக்க பாலக்காடு போனோம். அச்சமயம் அவர்கள் குழு அங்கே நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்தது. சண்முகத்தையும் அவர் சகோதரர்களையும் சந்தித்தேன். அக்காலகட்டத்தில் நடிகர்கள் எஸ்.வி. சுப்பய்யா, டி.வி. நாராயணசாமி, எஸ்.எஸ். ராஜேந்திரன் முதலியவர்கள் அந்நாடக சபையில் பணியாற்றி வந்தனா. இலக்கியத்தில் ஈடு பாடு கொண்ட அக்கலைஞர்களின் அறிமுகமும் எனக்குக் கிட்டியது. கால ஓட்டத்தில் அவர்கள் என் நண்பர்களானார்கள். டி.கே. சண்முகம் என் அன்புச் சகோதரர்களில் ஒருவர் ஆனார். 1944ல், டி.கே.எஸ். சகோதரர்கள், ஈரோடு நகரில் முகாமிட்டிருந்த போது, முதலாவது நாடகக் கலை மாநாடு நடத்தினார்கள். அதற்கு 'சண்முகம் அண்ணாச்சி என்னையும் அழைத்திருந்தார்.