பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் அப்போது நான் சென்னையில் நவசக்தி'யில் இருந்தேன். நண்பர் சண்முகம் அழைப்பை ஏற்று ஈரோடு போனேன். - மாநாடு சிறப்பாக நடந்து முடிந்தது. அச்சமயம் 'நாடகம்' என்ற பெயரில் ஒரு பத்திரிகை நடத்தும் யோசனை பற்றியும் பேசப்பட்டது. டி.கே. சண்முகம், 'நாடகம் பத்திரிகையை நீங்கள்தான் பொறுப்பேற்று நடத்த வேண்டும். எல்லா ஏறபாடுகளும் முடிவானதும் உங்களுக்கு எழுது வேன். நீங்கள் எங்கள் கம்பெனிக்கு வந்து விடலாம்' என்று தெரிவித்தார். நானும் ஆகட்டும்' என்று சொல்லி வைத்தேன். இடைக்காலத்தில் கிராம ஊழியன் அழைப்பு வலியதாகவும் தொடர்ந்தும் வந்ததால், நான் ஊழியனுக்கே போகத் தீர்மானித்தேன். 1944 பிப்ரவரி நடுவில் சென்னைக்கு வந்த சண்முகம் நவசக்தி’க்கு வந்து என்னை சந்தித்து, நாடகம்' பத்திரிகையை குமரி மலர் மாதிரி மாதம் ஒரு புத்தகமாக நடத்தத் திட்டமிட்டிருக் கிறோம்; அட்டைக்கான ஒவியம் எழுதி பிளாக் செய்யக் கொடுத்தாச்சு நீங்கள் எப்ப வருகிறீர்கள் என்று கேட்டார். . - - நான் என் முடிவை சொன்னேன். நாடகம் பத்திரிகையை விட மறுமலர்ச்சி இலக்கியப் பத்திரி கையான கிராம ஊழியன்தான் எனக்கு உகந்ததாக இருக்கும்’ என்றேன். அவருக்கு ஏமாற்றமும் வருத்தமும்தான். இருப் பினும் பாராட்டி வாழ்த்திவிட்டுச் சென்றார்.