பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்னனின் போராட்டங்கள் | 57 பின்னர், "நாடகம் என்ற பத்திரிகையை நடத்தும் எண்ணத்தை நாங்கள் கைவிட்டுவிட்டோம் தகுதியான ஆள் கிடைக்காததே காரணம். நாடகத் தைக் கருவிலேயே கொலை செய்த பாபம் உங்களையே சேரும்' என்று சண்முகம் எனக்கு எமுதினார். எங்களுக்கிடையே சுவாரஸ் படப் rை கடிதத் தொடர்பு நீண்ட காலம் வளர்ந்து வந்தது. நான் "கிராம ஊழியன்’ பத்திரிகையில் இருந்த காலத்தில் டி. கே. எஸ். குழுவினர் திருச்சியில் முகாமிட்டு’ நாடகங்கள் நடத்தினர். அப்போது அடிக்கடி திருச்சிக்கு வந்து, சண்முகத்தையும் இதர கலைஞர் களையும் நேரில் கண்டு பேசிப் பழகவும், அவர்கள் நாடகங்களைப் பார்த்து மகிழவும் வாய்ப்புகள் ஏற்பட்டன. அந் நாடகங்கள் பற்றி கிராம ஊழியன்’ இதழ்களில் விரிவாக எழுதினேன். 1945ல் டி. கே. எஸ். சகோதரர்கள் கோவையில் முகாமிட்டிருந்தார்கள். ஏ. எஸ். ஏ. சாமி எழுதிய 'பில் கனன்’ நாடகத்தை அவர்கள் அரங்கேற்றியிருந் தார்கள். 'பில்கனன்' திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டு வந்தது. ஏ.எஸ்.ஏ. சாமிதான் அதன் டைரக்டர்" அவர் கோவை ஜூபிடர் பிக்சர்சில் நீண்டகால ஒப்பந்தத்தில் சேர்ந்திருந்தார். அவருக்குக் கதை வசனம் எழுதிக் கொடுப்பதற்கு திறமை உள்ள உதவி யாள் ஒருவர் .ே த ைவ ப் பட்டது . நடிகர் டி.கே.சண்முகமும் அவரும் கலந்து பேசி நான் தகுந்த நபராக இருப்பேன் என்று தீர்மானித்தார்கள்.