பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் நண்பர் சண்முகம் எனக்குக் கடிதம் எழுதினார். நேரில் பேசி முடிவு செய்ய வேண்டிய விஷயம், அவசியம் வரவும் என்று குறிப்பிட்டிருந்தார். இப்போது என் அண்ணாவும் கோவையில் இருந் தார். சினிமா உலகம் துணை ஆசிரியராக. நான் சினிமா உலகம் உறவைத் துறந்து விட்டு, சென்னை சென்ற பின்னரும் அதன் தொடர்பு என்னை விட்டதில்லை. சென்னைக்கு வந்த பி.எஸ். செட்டியார் நவசக்தி ஆபீசுக்கு வந்த என்னை சந்தித்தார். அவர் தங்கியிருந்த இடத்துக்கு அழைத்துப் போய் அன்பாக உபசரித்தார். - 'நீங்கள் உங்கள் வளர்ச்சியைக் கருதி, பிரிந்து வந்து விட்டது சரிதான். உங்களைப் போல் சினிமா உலகம் பத்திரிகையை கவனித்துக் கொள்ளக் கூடிய ஒருவரை சிபாரிசு செய்யுங்கள். நான் பத்திரிகையில் சில அபிவிருத்திகள் செய்வேன்’ என்று தெரிவித்தார். என் அண்ணா அசோகனை நான் குறிப்பிட்டேன். என் அண்ணாவையும் அவருக்குத் தெரியும். ஆகவே, அவர் தயங்கவில்லை. அசோகன் சினிமா உலகம்’ பத்திரிகையின் துணை ஆசிரியர் ஆனார். பத்திரி கையும் வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் சென்றது. எனவே, என் அன்னாவையும் சந்திக்கலாம் என்று தான் கோவை போனேன். நண்பர் டி.கே. சண்முகம் ஜூபிடர் பிக்சர்ஸ் அதிபர்களான சோமு, முகைதீன் இருவருக்கும், டைரக்டர் ஏ. எஸ்.ஏ. சாமிக்கும் என்னை அறிமுகம் செய்து வைத்தார்.