பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்னனின் போராட்டங்கள் , 59 அப்புறம் தனியாக சண்முகம், சாமி, நான் மூவரும் பேசினோம். சண்முகம் விஷயத்தைச் சொன்னார். டைரக்டர் சாமி வெளிப்படையாகவே பேசினார். 'இப்ப எனக்கு ஆறு படங்கள் இருக்கு. ஆறு படங்களுக்கும் வசனம் எழுதணும். ஆனால் படத் திலே என் பேர்தான் வரும். உங்களுக்கு நியாயமான பணம் கிடைக்கும்படி ஏற்பாடு செய்வேன். மதுரை முருகன் டாக்கீஸ் தயாரிக்கிற ரத்னகுமார் படத்தை டைரக்ட் பண்ணுகிற பொறுப்பும் எனக்கு வரும். நீங்கள் ஜடுபிடர் படங்கள் ஆறுக்கும் எனக்காக வசனம் எழுதித் தருவதுக்காக, ரத்னகுமாருக்கு வசனம் எழுதுகிற சான்சையும் உங்களுக்கு வாங்கித் தருவேன். அந்தப் படத்தில் உங்க பேரைப் போட ஏற்பாடு செய்வேன். பணமும் நிறையக் கிடைக்கும்’ என்றார். சினிமாத் துறை மோகம் எனக்கு இருந்ததில்லை. அவர் பேரம் பேசிய தோரணையும் எனக்குப் பிடிக்க வில்லை. "சினிமாப் படங்களுக்குக் கதைவசனம் எழுதணும் கிற எண்ணமே எனக்கு எழவில்லை. இலக்கிய உலகத்தில் முன்னேறணும்கிற ஆர்வம்தான் இருக்கு. இலக்கியப் பத்திரிகைக்காக உழைப்பதே எனக்கு சந்தோஷமாயிருக்கு என்று சொன்னேன். 'இருக்கட்டுமே. கிராம ஊழியனை விட்டுப் போட்டு நீங்க இங்கே வரவேண்டாம். பத்திரிகையை யும் கவனித்துக் கொள்ளுங்க. அவ்வப்போது கோயம்புத்துார் வாங்க. எழுத வேண்டியதை