பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் 61 அவர் தனது வளர்ச்சி நலன் கருதித் தனியே சில திட்டங்கள் வகுத்திருந்தார். திருச்சியில் குடி யேறினார். . > . . . திருச்சியில் சிவஞானம் என்ற பிரமுகர் சிவாஜி' வாரப் பத்திரிகையும் அச்சகமும் நடத்திக் கொண் டிருந்தார். அந்த நிறுவனத்தில் உழைக்கும் பங்கு தாரர்’ ஆக சீதாராம் சேர்ந்தார். சிவாஜி' பத்திரிகையின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் பாடுபட்டார். விரைவிலேயே பத்திரிகையையும் அச்சகத்தையும் அவரே வாங்கிக் கொண்டு,சொந்தப் பொறுப்பில் அவற்றை நடத்தினார். 'கிராம ஊழியன்’ நிர்வாக ஆசிரியர்-அ. வெ. ர. கிருஷ்ணசாமி, ஆசிரியர்-வல்லிக்கண்ணன் என்று பெயர்கள் தாங்கிப் பிரசுரமாயிற்று. இதழ்தோறும் அது 890 பிரதிகள்தான் அச்சா யிற்று. அநேக ஊர்களில் அதற்கு விற்பனையாளர் கள் இருந்தார்கள். எனினும், பல இடங்களிலும் அஞ்சு, பத்து, இருபது பிரதிகள் என்ற கணக்கிலேயே அது போய்க்கொண்டிருந்தது. ஆயினும், கிராம ஊழியன்’ எழுத்தாளர்கள், பத்திரிகைக்காரர்கள், புத்தகப் பிரசுரகர்த்தர்கள் கவனத்தை கவர்ந்து வந்தது. பத்திரிகைகளுக்கு மாற்றுப் பிரதி ஆகவும், பெரும்பால்ான எழுத்தாளர்களுக்கு இலவசமாகவும் ஊழியன் அனுப்பப்பட்டு வந்தது. அன்று தொழில் புரிந்து வந்த முக்கியப் பதிப்பகங்கள் அனைத்தும் ஊழியன் மதிப்புரையை எதிர்பார்த்தன. மதிப்புரைக் காகப் புத்தகங்கள் அனுப்பி வைத்தன. அதனால் புதிய புத்தகங்கள் அதிகமாகவே கிடைத்தன.