பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் புத்தக மதிப்புரையை விரிவாகவும், சூடாகவும் சுவையாகவும் நான் எழுதி வந்தேன். பாதிக்கப் பட்ட வர்களால் அவை தாக்குதல்களாகக் கருதப் பட்டன. பாராட்டப்பட வேண்டிய புத்தகங்கள் குறித்து விரிவாக எழுதினேன். அப்போது, சம்பந்தப் பட்ட எழுத்தாளர்களும் பதிப்பகத்தார்களும் மிக மகிழ்ந்து போனார்கள். ஊழியன் புத்தக மதிப் புரையை பாராட்டிப் பேசினார்கள். இதெல்லாம் மனித இயல்பு எனக் கருதி நான் எதையும் பெரிது படுத்துவதில்லை. தி. க. சிவசங்கரன் துருவன்’ என்ற பெயரில் சினிமாப் பட விமர்சனங்கள் எழுதிக்கொண்டிருந் தார். விறுவிறுப்பும் வேகமும் நிறைந்த அவ்விமர்சனங் கள் ரசிகர்களின் கவனிப்பையும் பாராட்டுதல்களை யும் பெற்று வந்தன. முச்சந்தி' என்றொரு பகுதி. இலக்கிய விவகாரங் களையும் வம்புகளையும் பிள்ளையார் முச்சந்தியில் போட்டு உடைத்தார். - - - இலக்கியப் பிரச்னைகள் சம்பந்தமான கட்டுரை கள், கவிதைகள் சிறுகதைகள் பற்றிய கட்டுரைகள் ஊழியனில் பிரசுரமாயின. ந. பிச்சமூர்த்தி இதழ்தோறும் கவிதைகள் எழுதினார். யாப்பில்லாக் கவிதைகளை அவர் எழுதிக்கொண்டிருந்ததால், அதை எதிர்த்தவர்களும் ‘பிச்சமூர்த்திக்கு யாப்பிலக்கணம் தெரியாது. அதனால்தான் இப்படி எழுதுகிறார்' என்று குறிப் பிட்டார்கள், அது தவறான கருத்து என்று சுட்டிக்காட்டு வதற்காக ந. பி. இலக்கண வரம்புக்கு உட்பட்ட