பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் 163 கவிதைகளும் எழுதலானார். அவை அனைத்தும் ஊழியனில் வெளிவந்தன. சிட்டியும் அடிக்கடி எழுதி உதவினார். 'இலங்கையர்கோன் தொடர்ந்து கதைகளும் நாடகங்களும் எழுதி அனுப்பினார். ஊழியன் நின்று போகிற வரை அவருடைய எழுத்துக்கள் கிடைத்துக் கொண்டிருந்தன. சுப நாராயணன் என்ற சுய சிந்தனையாளர் வை. கோவிந்தனின் சக்தி பத்திரிகையில் 1930 களில் சர்குலேஷன் மானேஜராகப் பணியாற்றி வந்தார். தி.ஜ.ர. சக்தி'யிலிருந்து விலகிய பிறகு 40களில் சுப. நாராயணன் அதன் ஆசிரியரானார். சில வருடங்கள் அவர் அப்பதவியை வகித்தார், அச் சமயம் அவர் கிராம ஊழியனுக்கு சிந்தனைக்கட்டுரை கள் எழுதி வழங்கினார். அவை தனிரகமான கட்டுரைகளாக விளங்கின. பின்னர் அவை வாழப் பிறந்தோம்’ என்ற தொகுப்பு நூலாகப் பிரசுரம் பெற்றன. சுப. நாராயணன் என் நண்பர்களில் ஒரு "இன்ட்டரஸ்டிங் கேரக்டர் ஆக விளங்கினார். தமிழ் அபிமானமும் சிந்தனை வேகமும் கொண்டிருந்த அவருக்கு தமிழ் பத்திரிகைகளையும், தமிழ் எழுத் தாளர்களையும், தமிழ் நாட்டின் பெரும் பங்கு மனிதர்களின் போக்குகளையும் பிடிக்கவில்லை. எரிச்சலுற்று பலரிடமும் சண்டை பிடித்துக் கொண் டிருந்தார். பிறகு தமிழ் நாட்டை விட்டு வெளியேறி கோலாலம்பூர் போய் சேர்ந்தார். அங்கும் அவருடைய இயல்புகள் அவருக்கு 'கெட்ட பெயர் தான் வாங்கித்