பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் | 85 அவற்றில் சிலவற்றை நாடோடிக் கதைகள்’ என்ற தலைப்பில் ஊழியன் பிரசுரித்தது. அவற்றை என் அண்ணா ரா. சு. கோமதிநாயகம் எழுதினார். கிராம ஊழியனுக்கு நையாண்டி பாரதியின் கட்டுரைகளும், சொனா. முனா. எழுத்துக்களும் தனித்தன்மை தந்து கொண்டிருந்தன. அ. வெ. ர. கிருஷ்ணசாமி, ரெட்டியார், தேவராய பூபதி, அ. வெ. ர. கி. என்ற பெயர்களில் கட்டுரைகள், கதைகள் எழுதினார். கண்ணன் என்ற பெயரில் கவிதைகள் எழுதி வந்தார். "கிராம ஊழியன் கவனிப்புக்கும், பேசப்படுவதற் கும் உரிய ஒரு பத்திரிகையாக வளர்ந்து வந்த போதிலும், அது லாபகரமாக நடைபெறவில்லை. லிமிடெட் நிறுவனத்தின் செயலாளராக அ. வெ. ர. கி. இல்லாது, வேறு எவரேனும் பொறுப்பு வகித்திருந் தால், பத்திரிகையை ஒன்றிரு வருடங்களிலேயே நிறுத்திவிட்டிருக்கக் கூடும். ரெட்டியாரின் பாரதி பற்றுதலும், கவிதை மோகமும், இலக்கிய ஈடுபாடும், எழுத்து ஆர்வமுமே பத்திரிகையை நஷ்டத்துடன் தொடர்ந்து நடத்தும் உற்சாகத்தை அவருக்குத் தந்திருந்தன. - 1947ல், இலக்கியப் பத்திரிகை நடத்தியது போதும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டுவிட்டது. யுத்த காலம். அச்சு யந்திரங்களுக்கு நல்ல விலை இருந்தது. ஊழியன் பிரஸ் அச்சு யந்திரங்களை மிக லாபகரமான விலைக்கு விற்கக் கூடிய வாய்ப்பு வந்தது. உரிய காலத்தில், உரிய முறையில் அதை செய்து முடித்தார் ரெட்டியார்.