பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் . 67 எனது எழுத்துக்களை எல்லாம் அழகாக, உயர்ந்த முறையில், வசீகரமான புத்தகங்களாக வெளியிட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவற்றை அப்படி வெளியிட எந்தப் பதிப்பகத்தாரும் முன்வர மாட்டார் கள். நானே பிரசுரம் செய்வேன்; ‘சாந்தி நிலையம், வெளியீடுகளாக அவை பிரசுரம் பெறும் என்று எண்ணம் வளர்த்தேன். ... . நான் எழுதிய உருவகக் கதைகள் என் பெயருக்குத் தனி கவனிப்பும் மதிப்பும் சேர்த்திருந் தன. ஆஸ்கார் ஒயில்ட் ப்ரோஸ் போயம்ஸ்’ என்ற தலைப்பில் எழுதிய உருவகக் கதைகளும், ஜவான் துர்கனேவ் எழுதிய உருவகக் கதைகளும் (ப்ரோஸ் போயம்ஸ்) தமிழில் உருவகக் கதைகள் எழுதுவதற்கு என்னை ஊக்குவித்தன. நான் எழுதியவை 1940களில் 'கலைமகள் கலாமோகினி கிராம ஊழியன்’ "சினிமா உலகம்’ இதழ்களில் வெளிவந்தன. அவற்றை மிக உயர்ந்த முறையில் புத்தகமாக்கி சாந்தி நிலையம் வெளியீடாகக் கொண்டு வர வேண்டும் என்ற கனவு எனக்கு இருந்தது. அமெரிக்காவின் Random House பப்ளிகேஷன்ஸ் மாதிரி சாந்தி நிலையம் வெளியீடுகள் சிறப்பான வையாக விளங்கும்- விளங்க வேண்டும்- என்று ஆசைப்பட்டேன். மாடர்ன் லைபிரரி பதிப்புகள் என்று வெகுதரமான இலக்கிய நூல்களை அந்தப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதுக்குத் தேவையான பணம் எப்படியாவது கிடைக்கும் என்றும் நான் கனவு கண்டேன். மகாகவி சுப்பிரமணிய பாரதியும் அவர் காலத்தில் இப்படிக் கனவு கண்டு கொண்டிருந்தார். தனது