பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் கவிதைகளை உயர்ந்த முறையில் அச்சிடவும், சிறந்த இலக்கிய நூல்களை வெளியிடுவதற்கும் தனக்கு பத்தாயிரம் ரூபாய் வேண்டும் என்று அவர் விளம்பரம் கூட வெளியிட்டிருந்தார். நான் பணம் தேவை என்று விளம்பரப் படுத்த வில்லை. சும்மா கனவுகளை வளர்த்துக் கொண்டிருந் தேன். - கையில் காசில்லை, கடன் கொடுப்பார் யாரு மில்லை!" என்ற நிலைமைதான் எப்பவும். எனவே, உணர்ச்சி பூர்வமாகக் கனவுகளை வளர்த்துக் கொண்டிருப்பது தவிர வேறு வழி கிடையாது. கனவுகளை வளர்க்கும் உள்ளம் பெற்றிப்பது ஒரு நற்பேறு என்பதில் சந்தேகமில்லை. நான் சினிமா உலகம் பத்திரிகையில் இருந்த போது அறிமுகமான- இரண்டு நண்பர்கள், தொழில் துறையில் ஈடுபட்டிருந்தவர்கள், புத்தகப் பிரசுரத் திலும் ஈடுபட ஆசைப்பட்டார்கள். எனது கதை களைத் தொகுத்து ஒரு புத்தகமாகக் கொண்டு வர விரும்பினார்கள். அப்படியே செய்தார்கள். 'கல்யாணி முதலிய கதைகள் கோயம்புத்துாரி லிருந்து வெளிவந்தது. - - என் நண்பர் திருவனந்தபுரம் எஸ். சிதம்பரம் எழுத்து உலகில் புகழ் பெற வேண்டும் என்று ஆசைப் பட்டார். வைர வியாபாரியின் மகன். பெயர் பெற்றுள்ள எழுத்தாளர்களின் எழுத்துக்களை புத்தக மாகப் பிரசுரிப்பதன் மூலம் கவனிப்பும் புகழும் பெறலாம் என்று அவருக்கு யாரோ ஆலோசனை சொன்னார்களாம். புத்தகம் வெளியிடத் துணிந்த