பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்னனின் போராட்டங்கள் 69 சிதம்பரம் என் கதைகளைத் தொகுத்துப் பிரசுரிக்க முன் வந்தார். 'நாட்டியக்காரி' என்ற கதைத் தொகுப்பு வந்தது. இது கவிக்குயில் நிலைய வெளியீடு ஆக நாகர்கோவிலி லிருந்து பிரசுரம் பெற்றது. எஸ். சிதம்பரம் கவிக்குயில் மலர்' என்று விசேஷ மலர் தயாரித்து வெளியிட்டார். இரண்டு மலர்கள் வந்தன. புதுமைப்பித்தன் கவிதைகள் அவற்றில் இடம் பெற்றன. வேறு பலரது கதைகள் கட்டுரைகளும் வந்தன. சிதம்பரம் வைரம்' என்ற பெயரில் கவிதைகள் எழுதினார். அவற்றில் சில கிராம ஊழியன்’ இதழ் களில் வந்தன. அவர் தனது கவிதைகளை காதலிக்கு” என்ற தொகுப்பாக வெளியிட்டார். புதுமைப்பித்தன் திருவனந்தபுரத்தில் தங்கி காச நோயினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த போது அவருடன் பழகக்கூடிய வாய்ப்பை சிதம்பரம் பெற்றார். புதுமைப்பித்தனின் இறுதி நாட்களில் இவர் அவருக்கு உதவியாக இருந்தார். இலக்கியம் மூலம் புகழ் பெறவேண்டும் எனும் ஆசை சிதம்பரத்துக்கு இரண்டு மூன்று வருடங் களிலேயே அடங்கி விட்டது. அப்புறம் அவர் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. புகைப்படக் கலை கற்று புகழ் பெற ஆசைப் பட்டார் சிதம்பரம், அதற்காக ஆயிரக்கணக்கில் பணத்தை காலி பண்ணினார். சினிமா கேமிராக் கலைப் பயிற்சி பெறுகிறேன் என்று பெங்களுரில் வாசம் செய்தார். சரத் சந்திரரின் கதாபாத்திரமான வ-5