பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 | வல்லிக்கண்ண்னின் போராட்டங்கள் தேவதாஸ் ம்ாதிரி வாழ்ந்து, க்ெட்டு, அல்பாயுள் மரணம் அடைந்தார். , , . . . " வாழ்க்கை சிக்கல்கள் நிறைந்தது. விசித்திரமான மனிதர்களைக் கொண்டது. எளிதில் புரிந்து கொள்ள முடியாதது. மனிதர்கள் ஏன் எப்படி எப்படி எல்லாமோ வாழ்கிறார்கள் என்று விளங்கிக் கொள்ள வகை செய்யாதது. எஸ். சிதம்பரம் போன்றவர்களின் வரலாறு வாழ்க்கைப் புதிரின் சிக்கல்களை மேலும் அழுத்தமாக்குவதாகவே அமைகிறது. நான் துறையூரில் இருந்த போது, உயரிய முறையில் பெரிய புத்தகங்களை வெளியிடுவதற்குக் காலமும் வசதியும் இல்லாது போனாலும், பரபரப் பூட்டும் சிறுசிறு புத்தகங்கள் பிரசுரிப்பதற்கு வாய்ப்பு கிட்டியது. - - - நையாண்டி பாரதி குறுநாவல் ‘குஞ்சாலாடு', காரநாதன் எழுதிய கோயில்களை மூடுங்கள்!”, சொக்கலிங்கம் எழுதிய ஒடிப்போனவள் கதை’, மிவாஸ்கியின் அடியுங்கள் சாவுமணி', கோரநாதனின் ஈட்டி முனை ஆகியவை சாந்தி நிலைய வெளியீடு களாகப் பிரசுரமாயின. ஊழியன் அச்சகத் தோழர்கள் எரிமலைப் பதிப் பகம்’ என்று ஒரு பிரசுரம் தொடங்கினார்கள். தில்லை வில்லாளன் எழுதிய சாவோலை கருணாநிதியின் 'பலிபீடம் நோக்கி ஆகியவற்றுடன், கோரநாதன் எழுதிய படவுலகில் கடவுள்கள் என்ற சிறு பிரசுரமும் வந்தது. - இவை 1946-47ல் நிகழ்ந்தன. இப் பிரசுரங்கள் பரபரப்பான விற்பனையைப் பெற்றன. முக்கியமாக 'கோயில்களை மூடுங்கள்!” என்ற வெளியீடு. ஆறு