பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் | 71 மாதங்களில் மூன்று பதிப்புகள் கண்டது. அது. விறுவிறுப்பும் வேகமும் நிறைந்த நடையில் சூடான சிந்தனைகளைக் கூறும் அறிவு நூல் அது. ஒரு இரண்டாயிரம் ரூபாய் அந்தக் காலத்தில் மொத்தமாக எனக்குக் கிடைத்திருக்குமானால், ‘சாந்தி நிலையம் நிலை பெற்று புத்தக வெளியீட்டில் சாதனைகள் புரிந்திருக்கக் கூடும். அது நிகழ வாய்ப்பு இல்லாது போய்விட்டது. 1950களில் ஐயாயிரம் ரூபாய் வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. 60களில் என் கனவுகளை நனவாக்க எனக்கு பத்தாயிரம் ரூபாய் வேண்டும் என்று தோன்றி யது. எழுபதுகளில் பத்தாயிரம் ரூபாய் பற்றாது என்ற எண்ணம் உண்டாயிற்று. எண்பதுகளில், காகித விலை ஏற்றம், அச்சுக்கூவி உயர்வு முதலியவைகளைக் கருதும் போது, எனது புத்தகங்களை நானே பிரசுரிப்பதற்கு எனக்கு ஒரு லட்சம் ரூபாய் வேண்டும் என்று தோன்று கிறது. அப்பெரும் தொகை எனக்குக் கிடைக்கப் போவது மில்லை. புத்தக வடிவம் பெறாது குவிந்து கிடக்கிற என் எழுத்துக்கள் நூல்களாக வெளி வரப் போவதும் இல்லை. இதற்காக நான் வருத்தப்படுவதும் இல்லை. சரிதாம் போ இதனால் எல்லாம் எதுவும் குடி முழுகிப் போகாது' என்றுதான் என் மனக்குறளி கொக்கரிக்கும். லேரி, விட்டுத் தள்ளு!’ என்று அனைத்தையும் ஒதுக்கி விடுகிறேன்.