பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் மீண்டும் சென்னைக்கு கிராம ஊழியன் நின்று விட்ட் பின்னரும் சில மாதங்கள் நான் துறையூரிலேயே தங்கியிருந்தேன். சிறு பிரசுரங்களின் விற்பனை வேலை தொடர்ந்து இருந்தது. ..., . . . . 1947 ஆகஸ்டு 15ல் நாட்டிற்கு விடுதலை கிடைத் தது. இந்தியா சுதந்திர நாளை கோலாகலமாகக் கொண்டாடிய காலத்தில் நான் அந்தச் சிற்றுாரில் தான் இருந்தேன். "சினிமா உலகம்’ பத்திரிகை கோயம்பத்துாரி விருந்து மறுபடியும் சென்னை சேர்ந்திருந்தது. அது தன்றாகவே நடைபெற்றது. அண்ணா அசோகன் துணை ஆசிரியராக இருந்தார். சொந்தப் பத்திரி கையை கவனிப்பது போல் மிகக்கடுமையாக உழைத்து அவர் அதை வளர்த்து வந்தார். அதில் என்னுடைய எழுத்துக்கள் வெளியாயின. - - துறையூரில் நான் தனியாக இருப்பதைவிட சென்னைக்கே வந்து விடலாம்; சென்னையிலிருந்து சிறு நூல்களின் பிரசுரத்தையும் வளர்க்கலாம் என்று என் அண்ணா அபிப்பிராயம் தெரிவித்தார். - துறையூரில் ஊழியன் பிரஸ் குறைந்த விகிதத்தில் என் புத்தகங்களை அச்சிட்டுத் தந்தது. அச்சுத் தொழிலாள நண்பர்கள் மிகுந்த உற்சாகத்தடன் ஒத்துழைப்பு தந்து கொண்டிருந்தார்கள். சென்னைக் குப் போனால் இவை கிடைக்க மாட்டா. எனவே நான் தயங்கினேன். ஆனால், சென்னை சேர்ந்தால் உலக இலக்கிய நூல்கள் அதிகம் கிடைக்கும். இது ஒரு கவர்ச்சி அம்சமாக இருந்தது.