பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7荔 கொய்ந்த மரம், நொய்ந்த உடல், நொய்ந்த உயிர், கொய்ந்த உள்ளம்-இவற்றைக் காற்றுத் தேவன் புடைத்து கொறுக்கிவிடுவான். சொன்னாலும் கேட்கமாட்டான். ஆதலால், மானிடரே வாருங்கள். வீடுகளைத் திண்மையுறக் கட்டுவோம். கதவுகளை வலிமையுறச் சேர்ப்போம். உடலை உறுதி கொள்ளப் பழகுவோம். உயிரை வலிமையுற நிறுத்துவோம். உள்ளத்தை உறுதி செய்வோம். - இங்ஙனம் செய்தால், காற்று நமக்குத் தோழனாகி . . விடுவான். காற்று மெலிய தீயை அவித்துவிடுவான்; வலிய தீயை வளர்ப்பான். அவன் தோழமை கன்று. அவனை நித்தமும் வாழ்த்துகிறோம். 鲑