பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 எழுத்தாளன் சிந்தனையை ஒட்ட உதவி ஆசிரியன் உழைப்பில் ஆழ ஆசிரியர் ஆனந்தம் அனுபவிக்க இறந்த வீட்டில் வருத்தம் ஒட்ட பிறந்த வீட்டில் உற்சாகம் பொங்க கல்யாணத்தில் களிப்புப் பெருக காடேற்று விசேஷத்தில் கவலை மறக்க கோடையிலே கொதிப்பை அமுக்க குளிர்காலத்தில் குளிரைத் துரத்த விருந்தில் இன்பம் பரப்பஇவை காப்பி என்னும் ஒரு பொருளின் பல உபயோகங்கள். காப்பி சர்வ வியாபி, சர்வ வல்லமை பெற்றது. படைத்தல் காத்தல் அழித்தல் முத்தொழிலும் புரியும் முதல் மூர்த்தி. கலையும் பிறவும் படைக்கும் பூலோக பிரம்மாவுக்கு பூவுலக அமுதம் காப்பி. பண மற்றோர் பசியைக் கொல்வது காப்பி. கவலை சோர்வு சோம்பல்