பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 & | வல்விக்கண்ணனின் மணியான கதைகள் | என்பதன் அனுபவ ஞானம் சென்ற தலைமுறைப் பெண்கள் உணர்ந்து பயின்ற விதம்வேறு; இக்காலத்துப் பெண்கள் உணரும் வகைவேறு. கணவன் காலாவதி ஆகிவிட்டால், மனைவி தானே ராணியாகவும், கோயில் குளம் உறவினர் வீடு என்று ஊர்வழி போக உரிமை பெற்றவளாகவும் மாறி விடுகிறாள், ஆவு ஆச்சி காலத்துப் பெண்களை நினைவில் கொண்டு கூறப்படுகிற கூற்று இது. நவயுகத்து நாரீமணிகளுக்கும் இந்தக் கதைக்கும் கொஞ்சம் கூடச் சம்பந்தம் கிடையாது. ஆவு ஆச்சிக்குச் சாப்பாட்டுக் கவலை கிடையாது. குடியிருக்க வீடு இருந்தது. கொஞ்சம் சொத்து இருந்தது. அவள் காலம் முழுமைக்கும் போதும் இருக்கிற வரை அனுபவித்து விட்டு, கடைசி காலத்திலே சிவன் பேருக்குச் சொத்தை எழுதி வைத்துவிடுவது என்று அவள் முடிவு செய்திருந்தாள். போகிற இடத்துக்குப் புண்ணியம் தேட வேண்டாமா? அதற்காகத் தான். சிவப்பழம்' என்பார்களே அது எப்படி இருக்கும் என்ற சந்தேகம் அவ்வட்டாரத்தினருக்கு ஏற்படுவதில்லை. ஏற்படுமானால் சுலபமாகத் தெளிவுப்படுத்தி விடலாம். ஆவு ஆச்சியைப் பாருங்கள்! என்று காட்டித்தான். வெள்ளைச் சீலையும், பட்டை பட்டையாகத் துலங்கும் விபூதிப் பூச்சும், தாய தோற்றமும் கொண்டவள் ஆச்சி. அந்த ஜில்லாவின் தனிப் பண்பாட்டின்படி காது வளர்த்து, இரண்டு காதுகளிலும் தொங்கத் தொங்கப் பாம்படம் அணிந்திருந்தாள் அவள் அந்நகைகள் அவளது முகப்பொலிவை அதிகப்படுத்திக் காட்டின. சாதாரணமாகப் பிறர் அணிவதைப் பார்க்கிலும் பருமனாக அமைந்திருந்தன, ஆச்சியின் பாம்படங்கள். ஆதலால், அவளைப் ப்ற்றிப் புறம் கூற விரும்பிய பெண்கள் 'பரும் பாம்படத்துக்காரி என்று குறிப்பிடுவது வழக்கம். ஆச்சி பேசும்போது தலையை ஆட்டி ஆட்டிப்