பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[ಿರಾ தோல்வி | * : 00 பேசுவாள். அந்த அசைப்பினாலும், இயல்பான கனத்தாலும் காதுகள் ஊசலிடும். ஆகையினால் அவளை 'காதாட்டி’ என்று குறிப்பிடுவர் இளந் தலைமுறைப் பெண்கள். என்றாலும், இவற்றை எல்லாம் அமுக்கிவிட்டு மேலோங்கி நின்றது ஆவு ஆச்சிக்கு வந்து சேர்ந்திருந்த கெளரவம். அது விசேஷமானது. . ஆவு ஆச்சி பெரிய பக்தை வெள்ளி, செவ்வாய் தவறாது அம்மன் கோயிலுக்குப் போவாள். தினந்தோறும் காலையில் ஆற்றிலே நீராடி விட்டு, ஆற்றங்கரைப் பிள்ளையாரைச் சுற்றுவாள்-சுற்றுவாள்-சுற்றிக் கொண்டே யிருப்பாள் எத்தனை முறைகள் சுற்றினாள் என்கிற கணக்கு அவளுக்குக் கூட விட்டுப் போகும். அந்தி வேளைகளில் சிவன் கோயிலுக்குப் போகிறவள் அர்த்த சாமப் பூசை கழிந்த பிறகுதான் வீடு திரும்புவாள். அவளுக்குத்தான் வேறு வேலை கிடையாதே! ஆச்சி கோயிலுக்குப் போனால் அவ்வளவு தான். சாமியை அடியோடு புடுங்கிக்கிட்டு வந்து விடுகிற மாதிரித் தான். அடி அம்மா, எத்தனை கும்பிடு! எத்தனை சுத்துதல்! எத்தனை குட்டுதல்! விழுந்து விழுந்து எழுந்திருக்கிறதுக்குத் தான் கணக்கு உண்டா? பக்தி வேண்டியது தான். அதுக்காக, இப்படி எல்லாம் செய்தால்தான் சாமி சந்தோஷப்படுவேன் என்று சொல்லுதா? சும்மா-ஊரை ஏமாத்றதுக்குங்கேன்! இப்படிச் சில பெண்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள். பெண்கள் என்றிருந்தால் இஷ்டம் போல் பேசி மகிழத்தான் செய்வர். அதை யார் தடுக்க முடியும்? இத்தகைய சூழ்நிலைகளில் எடுப்பாகத் தலை தூக்கி மிளிர்ந்தது ஆச்சியின் புகழ். அதுவும் பக்தியின் மலர்ச்சி தான். . . - தெய்வத்துக்குப் படைத்தல் கன்னிக்கு வைத்தல் செத்துத் தெய்வமாகி விட்டவங்களை நினைத்து பூசை