பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் தோல்வி * 104 'வரலியே என்னைக் கூப்பிட யாரும் வரலியே!” வேதனை ஆச்சியின் நெஞ்சை அழுத்தியது. பர்வதத்துக்கு இவ்வளவு சின்னப் புத்தி இருக்குமின்னு நான் எண்ணவே இல்லையே. அவளுக்கும் எனக்கும் எப்பவோ ஒரு தடவை மனஸ்தாபம் ஏற்பட்டது என்பது வாஸ்தவம் பாதகத்தி இப்படிப் பண்ணுவான்னு நான் நினைக்கவே இல்லையே! என்று அவள் பொருமினாள். இருப்பினும் அவளுக்கு திருப்தி. இப்ப பூசை நடக்கும். ஆனால் சாமி யார்மீதும் வந்திராது. வெறிச்சினுதான் இருக்கும் தெய்வத்துக்குப் படைக்கிற வீடு. சாமி வரலேன்னு சொன்னால், அது பூசையோடு சேர்த்தியா? என்று கொக்கரித்தது அவள் மனம், அதிலே அவ்வேளைக்கு அவளுக்கு ஒரு திருப்தி, அவ்வளவுதான். ஒன்றரை மணி ஆயிற்று. 'ஏளா ஏ ஆச்சி! உன்னை தெய்வத்துக்குப் படைக்கிற வீட்டிலே காணவே இல்லியே' என்று கத்திக்கொண்டு வந்து சேர்ந்தாள் கீழத் தெருச் சிவகாமி. வாய் நிறைய வெற்றிலையும், தாலிச் சரட்டில் சொருகியிருந்த பூவும், வந்ததுமே ஏ. அம்மாடி என்ன களைப்பாக இருக்குதுங்கே?' என்று பெருமூச்சுடன் தரையில் சாய்ந்த ஆயாசமும் ஆச்சிக்கு வயிற்றெரிச்சலை முட்டின. . 'வயிறு நிறையத் தின்னுபோட்டு, திகரம் முட்டும் படியாக இப்படியா திங்கிறது? எச்சிக் கலை ராட்டு! என்று, தனக்கு விருந்துச் சாப்பாடு கிடைக்காத வயிற்றெரிச்சலையும் வட்டி வைத்துக் குமுறினாள் ஆவு. இருந்தாலும், போறா போ! அனுதாபப் பட்டு வீடு தேடி வந்திருக்காளே பின்னே? அங்கே வந்த எல்லாரும் என்னைத் தேடியிருப்பாங்களா சும்மாவா? என மனப்பால் குடித்து வந்தாள் ஆச்சி.