பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 o' வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் என்பதில் அவன் சந்தேகம் கொள்ளவில்லை. அவ்வேளையில் அவனுக்கு எழுந்த சந்தேகம் அவள் ஏன் திடீரென்று அப்படிச் சிரித்தாள்? என்பது தான். அவள் தான் சிரித்தாள். அவளது சிரிப்பின் சாயை உதடுகளில் ஊர்ந்தது; கண்களில் குறு குறுத்தது; கன்னக் கதுப்புகளிலே நெளிந்து கொண்டிருந்தது. எனவே, அவள் சிரிக்கவில்லை என்று சொல்லி விடமுடியாது. அவள் வீதி வழியே போன தன்னைப் பார்த்துச் சிரிக்கவில்லை என நினைத்துத் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ள அவன் தயாராக இல்லை. அவள் தானாகவே சிரிப்பாள்; காரணமற்றுச் சிரிக்கும் பைத்தியமாக இருக்கலாம் என்று எண்ணவும் அவனுக்கு மனமில்லை போலும். அவன் திரும்பிப் பார்த்தபோது அங்கேயே நின்று அவனுடைய முகத்தையே கவனித்த விதத்திலிருந்தே அக்குமரிப் பெண் தன்னைக் கண்டதும் தான் குலுங்கிச் சிரித்திருக்க வேண்டும் என்று நிச்சயமாகப்பட்டது அவனுக்கு. அவள் ஏன் சிரித்தாள்? எவளோ ஒருத்தி எதற்காக அவ்விதம் சிரிக்க வேண்டும்? அவன் உள்ளம் கேள்விகளை வீசத் தயாராக இருந்தது; திருப்திகரமான பதிலைக் கண்டுபிடிக்கத் திறமை இல்லை. அதற்கு, அவன் அதே இடத்தில் நின்று பலவாறு சிந்தித்தான் என்று எண்ண வேண்டியதில்லை. முதன் முறையாகத் திரும்பிக் கவனித்ததற்குப் பிறகு அவன் முகம் திருப்பிப் பார்க்கக்கூட இல்லை. நடந்துகொண்டே இருந்தான். நடக்கும் பொழுதுதான் சிந்தித்தான். தன்னால் விடை காண முடியாது என்று உணர்ந்தும் அவன் அ ப் பிரச்னையை வைத்துத் தறி அடித்துக் கொண்டிருப்பதில் பிரயோசனம் இல்லை என்று ஒதுக்கியும் விட்டான். என்றாலும், மறுநாள் அதே நேரத்துக்கு அவ் வீதியின் வழியாக நடக்கும் பொழுது சிவப்பிரகாசம் அறிமுகமாகாத அழகியின் சிரிப்பைப் பற்றி எண்ணிப் பாராது போய் விடவில்லை. மனசில் அந்த நினைப்பு எழவும் கண்கள்