பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o . *is, 1 நல்ல மாறுதல் * † 10 தாமாகவே அந்த வீட்டின் ஜன்னல் பக்கம் ஓடின. அங்கே அந்த அழகு முகம் காட்சி அளித்தது. அதனுடன் ஜோடி முகம் ஒன்றும் முளைத்திருந்தது. அழகு முகத்துக்கு இளைய முகம் அது என்பதைப் புரிந்து கொள்வதற்கு விசேஷமான திறமை எதுவும் தேவையில்லைதான். இரண்டு பேரும் அக்காளும் தங்கையுமாக இருக்கலாம் என்று அறிவித்தது அவன் உள்ளம். . அன்று ஜன்னலின் பின்னால் சிரிப்பு வெடிக்க வில்லை. இஸ்ஸ்! என்ற ஒலிக் குறிப்பு தான் அவன் காதை எட்டியது. சத்தம் போடா தேடி ' என எச்சரித்தது. உதடுகளை ஒரு விரலால் அழுத்திக் காட்டும் பெரிய முகம், திரும்பி நோக்கிய சிவப்பிரகாசத்தின் பார்வையில் பட்டது. ஆகா, அழகான காட்சி! என வியந்தது அவன் மனம், அதோ வந்து விட்டார்!’ என்று சின்ன முகத்துச் செவ்விய உதடுகள் உச்சரித்ததை அவனும் கேட்டு விட்டான் முன்னதாகவே. சின்னவளை எச்சரித்துத் தான் பெரிய முகம் பாவம் பிடித்தது என்பதை உணர்வதற்குக் கற்பனா சக்தியை உபயோகிக்க வேண்டிய அவசியமே கிடையாது. சிவப்பிரகாசம் திரும்பிப் பார்த்த போது, ஜன்னலின் பின்னாலிருந்த இரண்டு ஜோடிக் கண்களும் அவன் கண்களைப் பார்வையினால் தொட்டு விட்டுப் புரண்டன. கண்களின் பார்வை தாக்கவும் தாழ்ந்து விட்ட அவன் விழிகள் மீண்டும் ஓடி முகங்களை நாடவும், பெரிய முகம் சின்ன முகத்தைப் பார்த்துச் சிரித்தது. சிரித்துக் கொண்டே, 'பாரடி, அவர் பார்த்துக்கொண்டே போகிறார்!’ என்று முணுமுணுத்தது. அந்த முன முணப்பு அவன் காதுகளில் தெளிவாக விழுந்தது. உஸ்ஸ்! என்று பெரியவள் மீண்டும் எச்சரித்தாள். அம் முகத்தின் பாவம் அவனுக்குச் சிரிப்பை உண்டாக்கியது. 'இந்தப் பெண்கள் ஏன் இப்படி எல்லாம் செய்கிறார்கள் ' என்று அவனுக்குச் சந்தேகம் தான் வளர்ந்ததே தவிர, தெளிவு ஏற்பட வழி தோன்றவே இல்லை.