பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 : ; 3. வல்லிக்கிண்னனின் மணியான கதைகள் j ஆயினும் அவன் வீணாகக் கற்பனையை விரட்டிவிட ஆசைப்பட்டானில்லை. அழகான அம் முகங்களின் முழு உடற் தோற்றத்தைக் கண்டு களிக்க வாய்ப்பு ஏற்பட்டால்: என்று அவன் மனத்தின் ஒருபகுதி விரும்பியது. உஸ்ஸ்! என்று அதட்டி அதன் மண்டையில் ஓங்கிக் குட்டியது மனத்தின் சட்டாம் பிள்ளைப் பகுதி. அவ்விதம் கண்டிக்கிற போது, ஜன்னலின் பின்னால் கண்ட பெரிய முகத்தின் பாவனை அவனது நினைவிலே பளிச்சிட்டது. அதனால் அவனுக்குச் சிரிப்பு வந்து விட்டது. அவன் 'களுக்' என்றோ, 'ஹ ஹ ஹா என்றோ சிரித்துவிடவில்லை தான். இருந்தாலும் அவன் முகம் சிரிப்பினால் பாதிக்கப்பட்டது. அதைக் கவனித்து விட்டுத் தான் நடந்தார்கள் தெருவில் வந்தவர்கள். என்னடா இவன் தானாகவே சிரித்துக் கொண்டு போகிறானே! ஒரு வேளை லூஸ்ாக இருக்குமோ? என்று எண்ணியவாறே அவர்கள் அவனைக் கடந்து போயிருக்கலாம். அவன் மனத்தில் இந்த எண்ணம் உதிக்கவே சேச்சே! எவ்வளவு பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கிறேன் நான்! அநாவசியமான விஷயங்களைப் பற்றி எண்ணத் தொடங்கினாலே இந்த ஆபத்து தான் என்று அலுத்துக் கொண்டான் சிவப்பிரகாசம். ஆனாலும் கூட அவ் விஷயத்தை அநாவசியமானது' என்று ஒதுக்கிவிட முடியவில்லை அவனால், ஏனென்றால், தினந்தோறும் அவன் அந்த வீதி வழியாகத்தான் போயாக வேண்டும்; அவ் வீட்டின் பக்கமாக நடந்து தான் போக வேண்டியிருந்தது. அப்பொதெல்லாம் அவன் கண்கள் ஜன்னலை நோக்கித் தாமாகவே ஓடின. அந்த இடத்தில் ஒரு முகமோ, இரண்டு முகங்களோ காட்சி அளிக்கத் தவறுவதில்லை. இது தினசரி நிகழ்ச்சி ஆகிவிடவும், அவன் உள்ளத்தில் ஏக்கம் ஒன்று குடிகொண்டது. சிறிய ஏக்கம் தான்.