பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல மாறுதல் & 4 +4 அவனுடைய உற்சாகத்தின் மீது ஒரு வாளித் ண்ணிரைக் கொட்டி அதை நமுத்துப் போகும்படி செய்ய வண்டியிருக்கிறதே என்று வருத்தப்பட்டான் சிவம். பின்னே என்ன செய்வது? இல்லாததை ஆம்' என்று சாதிக்க முடியுமா அந்தப் பெண்களில் ஒருத்தி போல: o அவன் சொன்னான், இல்லையே தம்பி. இது என் படம் இல்லை என்று. - - பொய். நீ பொய் சொல்றே!' என்று திடமாக அறிவித்தான் சின்னப் பையன். நான் சொல்வது பொய் என்று உனக்கு எப்படித் தெரியும்? என்று அவன் கேட்டான். தெரியும் என்று தீர்மானமாகச் சொன்னான் சிறுவன். ‘எங்க வசந்தா அக்கா தான் சொன்னாளே! என்று நம்பிக்கை ஊறிய குரலில் அவன் பேசினான். அது தப்பு என்றான் சிவப்பிரகாசம். இன்னொரு அக்காள் சொன்னதுதான் சரி என்றது அவன் மனம். அதன் எதிரொலி போல் கேள்வி தொடுத்தான் பையன். 'அப்போ சாந்தா அக்காதான் கரெக்ட் இல்லையா? ‘என்ன விஷயம்? எனக்குத் தெரியாதே! என்றான் பையன் விஷயத்தை விளக்குவதற்காக வாயெடுத்தான். அதற்குள்ளாக ஜன்னலின் பின்னிருந்து அதட்டல் வெடித்தது. டேய் பாலு, இங்கே வாடா, தெருவிலே போகிறவர்களோடு எல்லாம் என்னடா வம்பளக்கிறே! என்று கண்டித்த குரல் பெரியவளுக்கு சொந்தமானதுதான். பாலு புத்தகத்தை வாங்கிக்கொண்டு ஓடிப் போனான். சிவப்பிரகாசம் ೩೯7676 T பக்கம் பார்வையை எறிந்தபோது, அங்கே நிலை பெற்றிருந்த முகங்கள்