பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

贯5 * வல்விக்கண்ணனின் மணியான கதைகள் | வேகமாகப் பின்வாங்கி, பார்வையிலிருந்து அஸ்தமன மாவதைக் கண்டான். 'அஹஹ, நல்ல தமாஷ்தான்! என்று சிரித்தது அவன் மனம் தெருவிலே போகிறவர்களோடு சின்னப் பையன் பேசிவிட்டால் என்னவாம்? தெருவிலே போகிறவர்களைப் பற்றி அவர்கள் மட்டும்தான் வம்பளந்து சிரிக்கலாம் போலிருக்கிறது!’ என்றும் சிறியது. 'இப்பொழுது எனக்கு விஷயம் ஒரு மாதிரியாகப் புரிகிறது. நாவல்களும் கதைகளும் எழுதுகிற எவன் படத்தையோ பார்த்துவிட்டு, கிட்டத்தட்ட அந்தப் படத்தில் உள்ளது போலவே எனது தோற்றமும் இருக்கிற காரணத்தினாலே, நான்தான் கதை எழுதுகிறவன் என்று எண்ணியிருக்கிறார்கள் இந்தப் பெண்கள். தினந்தோறும் அவர்களுக்குள்ளாகவே சர்ச்சை செய்து, அபிப்பிராய பேதம் வளர்ந்து, சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்காகப் படத்தை வைத்து ஒத்திட்டுப் பார்த்து, அப்படியும் ஐயம் நீங்கப் பெறாதவர்களாகி, அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்தோ, அல்லது சின்னவள் மட்டும் துணிந்தோ, சிறுவனை ஏவி விட்டிருக்கவேண்டும். அவர்களைப் பற்றி குட்டு அம்பலத்துக்கு வந்துவிடப் போகிறதே என்ற பயத்தினால் பெரியவள் ஜாக்கிரதையாக நடந்துகொள்கிறாள்' என்று அவனுடைய மனம் எடுத்துச் சொன்னது. இருக்கலாம். ஆனால், முதன் முதலில் பெரியவள் ஒரு சிரிப்பு சிந்தி என் கவனத்தைக் கவர்ந்தாளே, அதற்கு என்ன காரணம் இருக்கமுடியும்? ஒருவேளை அதற்கு முன்னரே அவ்விருவரும் என்னைப் பார்த்திருந்து, அன்று வசந்தா என்கிறவள் கேலியாக ஏதோ சொல்லவும் சாந்தா சிரித்திருக்கலாம் அல்லவா? நான் திரும்புகிறேன் என்பதை உணர்ந்ததுமே அவள் தலைமறைவாகப் போயிருக்கலாம் அல்லவா? என்று நினைத்தான் அவன்.