பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| நல்ல மாறுதல் | * 116 இவ்விதம் நினைப்பதே தன்னுடைய பண்பாட்டுக்கு விரோதமானது என்ற ஞானோதயம் அவனுக்கு திடீரென்று ஏற்பட்டது. அந்த விழிப்பு அவன் கால்களுக்கு வேகம் அளித்தது. இத்தகைய ஞானோதயமும் விழிப்பும் அடிக்கடி வரவழைத்துக் கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்ற நிலை சிவப்பிரகாசத்திடம் படிந்துவிட்டது. வீணான எண்ணங்களில் பொழுதுபோக்க விரும்பாத அவனது உள்ள அரங்கிலே சாந்தா, வசந்தா எனும் சுந்தரிகள் அடிக்கடி நினைவாக வந்து நாட்டியம் ஆடத் தொடங்கியிருந்தார்கள். இரண்டு பேரும் போட்டியிட்ட போதிலும் அவன் ஒட்டு சாந்தாவுக்குச் சாதகமாக இருந்ததாகத்தான் தோன்றியது. அவர்கள் எண்ணம் தவறாகிவிட்டதால், கதைக்காரன் அல்ல நான் எனும் உண்மை அவர்களுக்கு விள்ங்கி விட்டதால், அவ்விருவரும் முன்போல் சிரத்தை காட்டமாட்டார்கள் என்று அவன் நினைத்தான். அது தவறான யூகம் என்பதை ஒவ்வொரு தினமும் நிரூபித்து வந்தது. அந்த வீட்டின் ஜன்னலின் பின்னால் இரண்டு முகங்களும் வழக்கம்போல் காட்சி அளித்துக்கொண்டு தான் இருந்தன. சின்னவள் என்றாவது மறைந்து போயிருந்தால்கூட, பெரியவள் ஆஜர் கொடுக்கத் தவறுவதே இல்லை! இந்த விவகாரம் இப்படியே போய்க் கொண்டிருந்தால் எவ்விதம் வளர்ச்சியுற்று எப்படி முடியும் என்று சிவப்பிரகாசம் சும்மா பொழுது போக்கிற்காகக்கூட கற்பனை செய்து பார்த்ததில்லை. அநாவசியமாக அவ்வாறு எண்ணுவதுதான் அவனுக்குப் பிடிக்காதே! ஆனால், சம்பவங்கள் தாமாகவே நிகழ்ந்து கொண்டிருந்தன. ஏதோ ஒரு நியதியின்படி ஒருநாள் சிவப்பிரகாசம் தனது நண்பர் சுந்தரமூர்த்தியுடன் அவ்வீதி வழியே நடந்தபொழுது சம்பவ