பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| நல்ல மாறுதல் | ** 122 "சுந்தரகாண்டத்துக்கும் கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்டான் அவன். இல்லாமலா எல்லோரும் சொல்கிறார்கள்! சுந்தர காண்டம் படித்தால் சீக்கிரம் கல்யாணம் ஆகும் என்பது நம்பிக்கை. தனியளாய்த் தவமிருந்த நங்கையை அண்ணலுடன் சேர்த்துவைக்க அனுமன் தூது சென்றதும், கணையாழி கொடுத்ததும் அதில்தானே வருகின்றன. என்று தொடங்கினார் அவர். - - 'சரிதான். போர் அடிப்பை சகித்துக் கொள்ள வேண்டியதுதான். வேறு வழி இல்லை என்று தோன்றியது அவனுக்கு. என்றாலும் அது பெரிய தண்டனையாகப்பட வில்லை. அவனுக்குத் துணையாக சாந்தாவும் அங்கு இருந்தாளே அதுதான் காரணம் ! தான் அந்த இடத்திலிருந்து மறைந்து விடவேண்டியது அவசியம் என அவள் கருதவில்லை. ரத்னசாமி நல்ல ரசிகர்தான். ஆனால், அவர் எப்பொழுதும் புத்தகங்களைக் கட்டிக் கொண்டே அழுகிறார். கண்முன்னால் நடக்கிற விஷயங்களைப் புரிந்து கொள்ள அவர் ஆர்வம் காட்டுவதில்லை, காவிய பாத்திரங்களின் உளப் பண்புகளையும் செயல்களையும் அறிந்துகொள்வதில் உற்சாகம் காட்டுகிற அவர் தனது சூழ்நிலையில் நிகழ்கிற உண்மைகளை உணர்ந்துகொள்ள இயலாதவர் தான். இவ்விதம் சிவப்பிரகாசம் முடிவு கட்டினான். இல்லையென்றால், மணிக் கணக்கிலே சீதையையும் ராமனையும் பற்றி அளந்து கொண்டிருந்த அவர் தமக்கு அருகில் இருந்த சாந்தாவும், எதிரிலிருந்த சிவப்பிரகாசமும் கண்களினால் ஜீவன் தளும்பும் காவியம் இயற்றிக் கொண்டிருந்ததைக் கவனிக்காமல் இருப்பாரா? எனவே அவரும் சரியான புத்தகப் பூச்சி தான் என்று அவன் தீர்மானித்தான். ஆனால் அது எத்தகைய தவறுஅவசரப்பட்டு முடிவு கட்டப்பெற்ற தீர்மானம்-என்பதைக் காலம் நிரூபித்துக் காட்டியது.