பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 స్ట్రి வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் என்று யாராவது என்னைக் கேட்டால், அவள் என் சாந்தாவைப் போலவே தான் இருப்பாள் என்று நான் தயங்காமல் சொல்வேன்! என்றான் அவன். அவளுக்கு அவன் பேச்சு இனித்தது. எனினும் அவனைக் கேலி செய்வதில் விசேஷமான இனிமை கண்டாள் அவள் ஏன் இப்படி அளக்கிறீர்கள்? அதுதான் சொன்னேனே, நீங்கள் ரொம்பவும் மாறிப் போனிர்கள் என்று அவள் கூறினாள். இருக்கலாம். அதற்கு உன் தந்தையின் லெக்சர்கள் காரணமல்ல, கண்ணே, உனது கண்களின் காந்தசக்தி தான் முக்கிய காரணம்' என்றான் சிவப்பிரகாசம். சாந்தாவின் முகத்திலே சந்தோஷம் மாத்ரம் தானா குபிரென மலர்ந்தது? இல்லை. நாணமும் பாய்ந்து படர்ந்தது. رشلد $