பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(Gurr#33ff3; 'அம்மா, அம்மா!' என்று குழையும் குரலில் மகள் பத்மா கூப்பிடும் பொழுதே சாவித்திரி அம்மாளுக்குப் புரிந்துவிடும் அவள் ஏன் அழைக்கிறாள் என்று. இழைகின்ற தேன்குரல் தாயின் செவிகளிலே இனிமை புகுத்தினாலும் கூட, மனசிலே நெருப்புத் துண்டுகள் விழுந்தது மாதிரித்தான் இருக்கும். - 'ஊம்' என்று எதிரொலி அம்மாவிடமிருந்து பிறந்தால், 'ஒரு கதை சொல்லேன் அம்மா என மறுமொழி கொடுப்பாள் சிறுமகள். அம்மாளின் கலக்கம் பூர்த்தியாகி விடும். குழப்பத்தை மறைப்பதற்காக அவள் சிடுசிடுப்பாள். 'கதை என்னடி கதை? உனக்கு ஓயாமல் இதுதான் வேலைக் கழுதையாகப் போச்சு!" என்று. 'உனக்கு கதை சொல்லத் தெரியல்லே அதுதான். எதுக்காகம்மா என்கிட்டே எரிஞ்சு விழுறே? என்று முனங்குவாள் மகள். உண்மை என்னவோ அதுதான். ஆனால் தெரியாததை தெரியாது என்று ஒப்புக்கொள்ளும் மனோபாவம் எத்தனை பேருக்கு இருக்கிறது? சாவித்திரி அம்மாளும் மனிதப் பிறவி தானே. ஏண்டி தெரியாது? உனக்கு நான் எத்தனை கதைகள் சொல்லியிருக்கேன். நீ சும்மா சும்மா கதை சொல்லு-கதை சொல்லுயின்னு தொல்லை கொடுத்தால், நான் வேறே வேலைகளைக் கவனிக்க வேண்டாமா? என்பாள். அல்லது வேறு ஏதாவது சொல்லி அருமை மகளைப் பேசாதிருக்கச் செய்வாள் அதுதான் வழக்கம்.