பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夺 போக்கிரிக் குழந்தை & 428 சாவித்திரி அம்மாள் பி.எஸ்.ஸி. படித்துப் பட்டம் பெற்றதிலே குறைச்சல் கிடையாது. புத்தகம் புத்தங்களாக வாசித்துத் தள்ளியதில் ஒரு குறையுமில்லை. அவள் வாங்கி வாசித்த பத்திரிகைகளுக்கும் கணக்கு கிடையாதுதான். இத் ம் அவளுக்குப் பெரிய குறைதான், இந்தச் சின்னப்பெண்-இத்னியூண்டு பத்மா-ஏழு வயசுக் குழந்தை, கதை கதைன்னு கேட்கிறது. அதைத் திருப்திப்படுத்தும்படி நம்மாலே கதை சொல்ல முடியலியே! என்று. ...? 'எனக்கு ஒரு கதை சொல்லேன்' என்று பத்மா கேட்பாள். மில்லர் ஆவ் தி டியை சந்தித்த எட்டாவது ஹென்றியைப் பற்றியும் சிலந்தி பூச்சி வலைப்பின்னுவதைப் பார்த்தபடி ಟ್ಲಿ ராபர்ட் புரூஸ் பற்றியும் ரொட்டியைத் தீய விட்டு விட்டு சிந்தனையில் ஆழ்ந்து கிடந்த ஆல்பிரட் மன்னனைப் பற்றியும், தான் தாகத்தால் தவித்த போதும், 'என் தேவையினும் அவன் தேவை அதிகம் என்று தண்ணிரை வேற்ொவனுக்கு அளிக்கும்படி கூறிய ஸர் பிலிப் விட்னி பற்றியும் அம்மா சொல்லு வாள். உப்பு சப்பில்லாமல் சொல்லுவாள். இதெல்லாம் குழந்தைக்கு எப்படி மகிழ்வு தரும்? அவள் உதட்டைப் பிதுக்குவாள். என்னம்மா நீ! என்னென்னவோ சொல்றியே ' என்று அலுத்துக் கொள்ளுவாள். இந்த அம்மாவுக்கு நல்ல கதையே சொல்லத் தெரியாது. அடுத்த வீட்டு ஆச்சிதான் அழகு அழகாகக் கதை சொல்லுவா. மீனார்ாசா கதை, வேதாளக்கதை .உம், வந்து வந்து.பல்லுக்கு மெதுவான கல்லுக்குப் போனவர் கதை. அப்புறம்-அப்புறம்.மாம்பழ மங்கை கதை, பிறகு புலிப்பால் கதை-இப்படி என்ன்ென்னவோ கதை எல்லாம் சொல்லுவாளே, என்னமா இருக்கும் தெரியுமா ஒவ்வொரு கதையும்? அந்த வீட்டுக்கு ஒரு அத்தை வருவாளே அவ கதை சொல்லுவா, சொல்லுவா-சாப்பாடு கூட வேண்டாம்; ன்னைக்கெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கலாம் போலே சால்லுவா, இந்த அம்மா சொல்லுவதும் கதையா? என்று தனக்குத்தான்ே புலம்பிக் கொள்வாள் பத்மா, மகளின் மனக்குறை அம்மாவுக்கும் தெரிந்துதான் இருந்தது. மகளின் தனிமொழி அவ்வப்போது அவள் காதில் விழுந்து தானிருந்தது; தன்க்கு நல்ல கதை சொல்லத் தெரியவில்லையே என்று அவள் வருத்தப்பட்டாள். "பி.எஸ்.ஸி. பட்டம் பெற்றிருந்து என்ன பயன் படிப்பே இல்லாத-பள்ளிக்கூடத்தையே எட்டிப்பார்த்திராதபண்கள் பெற முடிந்த "ஸர்டிபிகேட்டை நம்மால் பெற முடியவில்லையே என்ற ஆதங்கம் அவள் உள்ளத்தில் நிலை பெற்றிருந்தது. பத்மா சிலசமயம் அப்பாவிடம் போய் கதை கேட்பாள்.