பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 • ಖುರಾಗ್ತFFಿರ್ತ] அவர் அடித்து அனுப்புவார். எரிந்து விழுவார். அல்லது, அவளுக்குப் பிடிக்காத ஏதாவதொரு கதையைச் சொல்லி அனுப்பிவிடுவார். அன்றும் அப்படித்தான். - 'இப்போ எனக்கு நேரம் இல்லேடி கண்ணு , சாயங்காலம் வா, அருமையான கத்ை ஒன்று சொல்கிறேன் என்றார் அப்பா, பத்மா ஆவலுடன் அது என்ன கதை அப்பா? என்று கேட்டாள். 'சாயங்காலம் தான் சொல்லுவேன். சமர்த்துக்குட்டி இல்லையா நீ! இப்ப போயிட்ம்மா என்று தாஜாப் ப்ண்ணினார் தந்ன்த, அவள் தொந்தரவு கொடுத்தாள். என்ன கதையின்னு சொல்லேன். கதைப் பேரை மட்டும் சொல்லு நான் பேர்ய் விடுகிறேன்' என்று கெஞ்சினாள். - 'கஸ்பியான்கா கதை' என்றார் அப்பா. அது என்ன கதை அப்பா? என்று மகள் கேட்கவும், அவருக்கு உண்மையாகவே கோபம் வந்துவிட்டது. இங்கேயிருந்து போறியா? இல்லே, உன் மண்டையை உடைக்கட்டுமா? என்று கூப்ப்ாடு போட்டார். பத்மா மூச்சு-பேச்சு காட்டாமல் வெளியேறி விட்டாள். கொஞ்சநேரம் அங்கும் இங்கும் அலைந்தாள் அவள். ஆனால் அது என்ன கதை? அது எப்படி இருக்கும்? என்ற துடிப்பு அவள் உள்ளத்தைக் குடைந்து கொண்டே இருந்தது. அம்மாவுக்குத் தெரியாமலா இருக்கும் ? அம்மாவிடம் கேட்டுப் பார்க்கலாமே என்ற எண்ணம் எழுந்தது அவளுக்கு. அவ்வளவுதான் குதியாய் குதித்தபடி ஓடினாள் வீட்டுக்குள்ளே, w 'அம்மா, அம்மா!' என்று கூவிக் கொண்டு வந்த மான்குட்டி போன்ற மகளை மகிழ்வும் பெருமையும் துளும்பக் கவனித்தாள் சாவித்திரிஅம்மாள். என்னம்மா கண்ணு, அம்மாவுக்கு என்ன கொண்டு வந்திருக்கிறே? என்று கொஞ்சினாள். ". - - உனக்கு ஒரு கதை தெரியுமாம்மா? காபியாங்காகதை? என்று படபடத்தாள் பத்மா. 'காப்பியாங்கா கதையா? 'ஊம்ம். அப்பா சொன்னாரே காபியாங்கா கதை, நல்லாயிருக்கும்னு சொன்னார். ஆனால் கதையை இப்ப சொல்லம்ாட்ட்ேன், சாயங்காலம் தான் சொல்வேன்னு சொல்லிப் போட்டார் ! அம்மாளுக்கு பளிச்சென விளங்கியது கஸ்பியான்கா கதையா? என்றாள். - -