பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

戟 3.

  1. 34

'நானா நாவன்னா ஒருமாதிரியான ஆசாமி: ஊராரோடு ஒத்துவராத கொள்கைகள் உடையவர்; எதிலுமே அவருக்கு சந்தேகம்தான் என்றெல்லாம் புகழ் பரவிவியிருந்தது அந்த ஊரிலே, & இது ஜோதிக்கும் தெரியும். இருந்தாலும் அவரது மனச்சாட்சி வாய்மூடி மெளனியாகி உன் வழியே போ அப்பா பக்தா என்று வழிகாட்டவில்லை அப்போது. அவர் தலையைத் தடவிக்கொண்டார். சிறு தயக்கம். பிற்கு தொண்டையை செருமிச் சரிப்படுத்திக்கொண்டு. பேசினார். அண்ணாச்சி, நீங்க எல்லாரையும் ஒரே மாதிரியாக னைணிவிடப்படாது. நீங்க சொல்கிற மாதிரியே சிலபேரு இருப்பாங்க... இருக்கிறாங்க. நான் இல்லையின்னு காதிக்கலே, அதுக்காக கண்ண்ை மூடிக்கிட்டு எல்லாருமே இப்படித்தான்னு ஒரே போடாய்ப் போடுவது தப்பு. அது நல்லாயில்லே அண்ணாச்சி. இப்ப அம்பலம் பிள்ளை வீட்டுக்கு எழுந்தருளியிருக்கிறாரே திருச்சிற்றம்பலத் தடிகள்.: 'அந்தத் தடிகள் பேரே அதுதானோ? என்று சிரிக்காமலே கேட்டார் நாராயணன். ராமலிங்கத்துக்குக் கோபம் வந்தது. இருப்பினும் இந்த மனுசனிடம் கோபித்துத்தான் என்ன பிரயோசனம் ! என்று நினைத்து அமைதியாகவே பதில் சொன்னார். அடிகள பெயர் வேறு ஏதோதான்.ஆனால் சாமிகள் சதா திருச்சிற்றம்பலம். திருச்சிற்றம்பலம் என்று உச்சரித்துக்கொண்டிருப்பது வழக்கம். அதனாலே அவருக்கு திருச்சிற்றம்பலத்து அடிகள் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது: என்று ஜோதி விளக்கிளார். 'ஒகோ, அப்படியா சங்கதி!' என்ற கீேடிங்