பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.* ు o - - & * | 35 & | வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் ந. நா. உம், அப்புறம். இந்தச் சாமியாரிடம் என்ன விசேஷ சக்தி இருக்கிறதாம் ? அடிகள் இறைவன் அருள் பெற்றவர்தான், அதில் சந்தேகமே கிடையாது.” 'ஒகோ ? ஆண்டவனே தன் கைப் பட நற்சாட்சிப்பத்திரம் எழுதிக் கொடுத்திருக்கிறானோ? என்று புரளி பண்ணினார் நாவன்னா. பெரியவர்களைப் பற்றி இப்படி எல்லாம் பேசப்படாது. அண்ணாச்சி, நீங்களே அடிகளை ஒருமுறை பாருங்க. அவர் மகிமை உங்களுக்கும் புரியும். அடிகள் சாப்பிடுவதே கிடையாது.” ஆங், என்னது? சாப்பிடுவதே கிடையாதா? என்ன ஆச்சர்யம் ! என்று நாராயணன் கத்தினார், அந்த சக்தியை ஊருக்கெல்லாம் அருள் புரிந்தால் பசிக்கொடுமை குறையுமே!’ ராமலிங்கம் சிரித்தார், சாப்பிடுவதில்லை என்றால், சோறு குழம்பு கறிவகைகளை தொடுவதில்லை என்றுதான் சொன்னேன். பட்டினி கிடக்கவில்லை அவர், பசியாத வயிறு உடையவர் யார் இருக்கிறாங்க. இந்த உலகத்திலே! என முணமுணத்தார். 'சரிதான், காக்காய் கறி சமைத்து கருவாடு மென்று தின்னும் சைவர் போலிருக்கு ! 'சேச்சே அடிகளைப்பற்றி இப்படி எல்லாம் பேசப்படாது அண்ணாச்சி. இப்ப நான் புதுசா என்னய்யா சொல்லிப்போட்டேன்? முன்பே ஒருவர் சொல்லி வச்சதைத்தானே சொன்னேன். கரு வாடும் என்று கால் காயை மட்டும் கறிபண்ணிச் சாப்பிடும் சைவப் பெரியாராக்கும் என்றேன், இதில் என்ன தவறு?